உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமியக் கலீஃபாவாக அதாவது இஸ்லாமியக் குடியரசுத் தலைவராக இருந்த அக்காலத்தில் தன்னுடைய ஆட்சியில் கடைவீதிகள் எவ்வாறு இருக்...
உமர் (ரழி) அவர்கள் இஸ்லாமியக் கலீஃபாவாக அதாவது இஸ்லாமியக் குடியரசுத் தலைவராக இருந்த அக்காலத்தில் தன்னுடைய ஆட்சியில் கடைவீதிகள் எவ்வாறு இருக்கின்றன என்பதைக் கவனிப்பதற்காக கடைத்தெருப் பக்கமாகச் சென்றார்கள்.
அவ்வாறு சென்ற வேளையில் ஓர்க் கடை வீதியின் ஓரமாக வயது முதிர்ந்த ஒருவர் யாசகம் கேட்டுக் கொண்டிருப்பதை அவதானித்தார்கள். ஆட்சியாளர் உமர் (ரழி) அவர்களுக்கு அந்த வயது முதிர்ந்தவரைக் காணப் பொறுக்கவில்லை.
ஓடிச்சென்று அந்த வயோதிபரின் கையைப் பிடித்து அவர் யார் என்பதை விசாரிக்க ஆரம்பித்தார்கள். அப்பொழுது அந்த வயது முதிர்ந்தவரும் தன்னுடைய ஆட்சின் எல்லைப் பகுதிக்கு உட்பட்டவர் என்பதை அறிந்து கொண்டார்கள். பின்பு அவர் முஸ்லிம் அல்லாதவர் என்பதையும் அறிந்து கொண்டார்கள்.
அந்த நேரத்தில் ஆட்சியாளர் உமர் (ரழி) அவர்கள் அந்த வயது முதிர்ந்தவரைப் பார்த்து தாங்கள் யாசகம் கேட்பதற்கு காரணம் என்ன என்பதை வினவினார்கள். அதற்கு அந்த வயோதிபர் இவ்வாறு பதிலளித்தார். "எனக்கு வயதாகிவிட்டது. அதனால் என் உடலில் தளர்ச்சியும் ஏற்பட்டுவிட்டது. ஆகையால் என்னுடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட என்னால் உழைக்க முடியவில்லை. இதனால் என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள நான் யாசம் கேட்கிறேன்" என்று அந்த வயோதிபர் பதிலளித்தார்.
இதைக் கேட்ட ஆட்சியாளர் உமர் (ரழி) அவர்களுக்கு உள்ளம் கசிந்து கண்களால் கண்ணீர் வழியத் தொடங்கியது. பின்னர் இஸ்லாமியக் குடியரசத் தலைவர் உமர் (ரழி) அவர்கள் சொன்னார்கள்; "வயோதிபரே! நாங்கள் உங்களிடம் நியாயமாக நடந்து கொள்ளவில்லை என்று நான் எண்ணுகிறேன். நீங்கள் வாலிபராக இருந்து உழைத்த நேரத்தில் உங்கள் உழைப்பிலிருந்து (ஜிஸ்zயா) எனும் பாதுகாப்பு வரியை வசூலித்த நாங்கள் நீங்கள் உழைக்க முடியாத நாட்களில் உங்களை கவனிக்காமல் விட்டு விட்டோமோ என்று எண்ணுகின்றேன்."
பின்னர் கடல் கடந்தும் மாபெரும் நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த கலீஃபா உமர் (ரழி) அவர்கள் அந்த வயோதிபரை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தனக்குத் தானே பரிகாரம் தேடும் அளவுக்கு தன் கைகளாலேயே உணவு தயாரித்து தன்னுடைய கைகளாலேயே அந்த வயோதிபருக்கு உணவைப் பரிமாறினார்கள். பின்னர் அவர் உண்பதை அழகு பார்த்தார்கள் உமர் (ரழி) அவர்கள்.
பின்னர் தன்னுடைய ஆட்சியின் கீழ் உள்ள பொது நிதி கருவூலத்தின் (பைத்துல்மாலின்) பொறுப்பு தாரியை அழைத்து அந்த வயோதிபருக்கும், அவரைச் சார்ந்து வாழ்பவர்களுக்கும் தேவையான நிதி உதவியை வழங்கிக் கொண்டே இருக்கும்படி கட்டளையிட்டார்கள்.
இவர்கள்தான் எங்கள் தலைவர் உயிருக்கு மேலான கண்மணி நாயகம் ﷺ அவர்கள் வழிநடத்திய சஹாபாக்கள். இதுதான் இஸ்லாமிய ஆட்சி. இப்படிப்பட்ட ஓர் ஆட்சியைத்தான் நபிகள் நாயகம் ﷺ அவர்களும் இஸ்லாமியக் கலீபாக்களும் நிகழ்த்திக் காட்டினார்கள்.

COMMENTS