ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இன்று வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மனித சமுதாயத்தினரினதும் வாழ்க்கைக் காலங்கள் மாறுபட்டவையாகும். உதாரணமா...
ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இன்று வரையான காலப்பகுதியில் ஒவ்வொரு மனித சமுதாயத்தினரினதும் வாழ்க்கைக் காலங்கள் மாறுபட்டவையாகும். உதாரணமாக ஆதம் (அலை) அவர்கள் ஆயிரம் வருடங்கள் வாழ்ந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வந்த சமுதாயத்தினர்கள் ஒவ்வொருவரினதும் வாழ்க்கைக் காலங்கள் குறைந்து குறைந்து தற்போது 60 முதல் 70 ஆக எம்மில் வந்து நிற்கின்றது.
ஆக ஆதம் (அலை) அவர்களின் வாழ் நாள் மற்றும், இன்று நாம் வாழக்கூடிய வாழ்நாள் வரை மறுமையின் பார்வையில் எமது வாழ்நாள் எவ்வளவு காலங்கள் என்பதை உணர்த்துவதற்காகவே இது ஒரு படிப்பினைக் கட்டுரையாகும்.ஒரு மனிதன் இவ்வுலகில் 1000 வருடங்கள் வாழ்ந்தால் அவன் மறுமையின் பார்வையில் வெறும் 24 மணி நேரங்கள் அதாவது ஒரு நாள் வாழ்வதற்கு சமனாகும். ஆக ஒவ்வொரு மனித சமுதாயத்தினரும் வாழ்ந்த காலங்களைப் பின்வருமாறு நோக்குவோம்.
அப்படியானால் இன்று நாம் உலகில் 60, 70 வருடங்கள் வாழ்வது என்பது அல்லாவின் பார்வையில் அதாவது மறுமையின் பார்வையில் வெறும் ஒன்றரை மணி நேரங்கள் மாத்திரம் தான். அதாவது வெறும் 90 நிமிடங்கள்.
ஆக உண்மையாக எமது வாழ்க்கை வெறும் 90 நிமிடங்கள் மாத்திரம் தான்.
சுப்ஹானல்லாஹ்....
எம்மை மறுமையில் எழுப்பி இறைவன் கேட்கும் கேள்விகள் ஞாபகம் இருக்கின்றனவா?. எவ்வளவு காலம் நீங்கள் பூமியில் வசித்தீர்கள் என்று இதைத்தான் அல்லாஹ் கேட்பான்.
எத்தனை ஆண்டுகள் நீங்கள் பூமியில் தங்கி இருந்தீர்கள்?இதற்கு நாங்கள் அளிக்கப்போகும் பதில் என்ன தெரியுமா? ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிய நேரம் பூமியில் இருந்திருப்போம் என்று தான் கூறுவோம்.
அல்குர்ஆன் 23:112
ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது நேரம் நாங்கள் பூமியில் தங்கியிருப்போம்.இதுதான் அந்தக் கேள்வியிலும், அதற்கான பதிலிலும் இருக்கும் ஆழமான செய்தி. இப்பொழுது புரிகிறதா? உலக வாழ்க்கை எவ்வளவு அற்பமானது என்று.
அல்குர்ஆன் 23:112
இன்னும் கொஞ்சம் ஆழமான சிந்தித்தால்..., எம்மில் யாரும் இதற்குப் பிறகு முழுமையாக ஒன்றரை மணி நேரம் வாழப்போவது கிடையாது. ஏனென்றால் 60 வயதை மூன்றாகப் பிரிக்கும் பொழுது 20, 20, 20 ஆகும். அதேபோன்று ஒன்றரை மணி நேரத்தை 3 ஆகப் பிரிக்கும் பொழுது அரை மணி நேரம் 3 வருகின்றது.
ஆக ஒருவருக்கு 20 வயது பரிபூர்ணமாகும் பொழுது அவருடைய அரைமணிநேரம் முடிந்து விட்டது என்று அர்த்தம். ஒருவருக்கு 40 வயது பரிபூரணமாகும் பொழுது அவருடைய ஒரு மணி நேரம் முடிந்தது என்று அர்த்தம். எனவே இப்பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களில் அதிகமானவர்களுக்கு உங்கள் ஆயுற்காலத்தில் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ முடிவடைந்து தான் இருக்கும்.
கவனித்தீர்களா?... இந்த உலக வாழ்க்கை என்பது மிகவும் அற்பமானது. நிஜமான மரணமே இல்லாத வாழ்க்கை மரணத்திற்கு அடுத்தபடியாகத் தான் உள்ளது. அதனால் தான் அல்லாஹ் தனது அல்குர்ஆனில் மரணத்தை முன்னாடியும் வாழ்க்கையைப் பின்னாடியும் கூறியிருப்பதன் நோக்கம் இதுதான்.
மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.இந்த உலகம் நிரந்தரமானதல்ல. இதனால் தான் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறிக்காட்டினார்கள்; இந்த உலகில் நீ ஒரு அண்ணியனைப் போன்றோ அல்லது ஒரு வழிப்போக்கனைப் போன்றோ வாழ்ந்துவிடு.
அல்குர்ஆன் 67:2
ஆகவே எமது வாழ்க்கையை அற்பமான இவ்வுலகத்திற்காக அன்றி மறு உலகத்திற்காக வேண்டி அமைத்துக் கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் கிருபை செய்வானாக...
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS