மனிதன் என்ற வகையில் எமக்கு ஏராளமான தேவைகள் குவிந்து கானப்படுகின்றன. இப்படி இருக்கின்ற இத் தேவைகளை எம்மால் ஒரு கட்டத்தில் நிறைவேற்ற முடியாமல்...
இப்படி எவராலும் உறுதியாகப் பொறுப்பேற்க முடியாத எமது தேவைகளை பகலின் இறுதி வரைக்கும் ஒரு தொழுகையைத் தொழுவதன் மூலம் அல்லாஹ் பொறுப்பேற்பதாகக் கூறுகின்றான். அது என்ன தொழுகை என்பதை ஆராய்வோம்.
"ஆதமின் மகனே! எனக்காகப் பகலின் ஆரம்பத்தில் நான்கு ரக்அத்துக்கள் தொழுது கொள்ளுங்கள். பகலின் இறுதி வரைக்கும் உங்களது தேவைகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்" என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.ஆக பகலின் ஆரம்பத்தில் தொழக்கூடிய அத்தொழுகை என்ன தொழுகை என்பதை மற்றுமொரு ஹதீஸின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.
(திர்மிதி:- 438 / அஹ்மத்:- 26,208)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:- "லுஹா நேரத்தில் (அதாவது பகலின் ஆரம்பத்தில்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுமாறு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எனக்கு அறிவுறுத்தினார்கள்எனவே லுஹாத் தொழக்கூடிய மக்களின் பகலின் இறுதி வரைக்கும் உள்ள தேவைகளை அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கின்றான்.
(புஹாரி:- 1,981)
ஆகவே லுஹாத் தொழுகையை பேணித் தொழுது கொள்ளுவோம். எமது தேவைகளை அல்லாஹ் நிறைவேற்றுவான்.
இன்ஷா அல்லாஹ்...
COMMENTS