பர்ளுகள்:- இவற்றை செய்யாமல் வுழூ நிறைவேறமாட்டாது. ஸுன்னத்துக்கள்:- இவைகள் விடுபட்டாலும் வுழூ நிறைவேறும் ஆனால் இதனை விடுவதன் மூலம் ஸ...
பர்ளுகள்:- இவற்றை செய்யாமல் வுழூ நிறைவேறமாட்டாது.
ஸுன்னத்துக்கள்:- இவைகள் விடுபட்டாலும் வுழூ நிறைவேறும் ஆனால் இதனை விடுவதன் மூலம் ஸுன்னத்தின் நன்மை தவறிவிடும்.
நான் எனது வுழூவை பின்வருமாறு ஆரம்பம் செய்வேன்.
2.பின்பு மூன்று தடவைகள் வாய்க் கொப்பளிப்பேன். (இது ஸுன்னத்தாகும்)
3. பின்பு மூன்று தடவைகள் நாசிக்கு தண்ணீர் செலுத்துவேன். (இது ஸுன்னத்தாகும்)
4. பின்பு முகம் கழுவும் போது உள்ளத்தால் வுழூவின் கடமைகளை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத்து வைப்பேன். (இது பர்ளாகும்)
5. பின்பு எனது முகத்தை அகலத்தால் ஒரு காதிலிருந்து மறு காது வரையிலும் நீலத்தால் வழமையில் தலை முடி முளைக்கும் இடத்திலிருந்து நாடிக்குழி வரையிலும் பரிபூரணமாக மூன்று தடவைகள் கழுவுவேன். (முகத்தை ஒரு தடவை கழுவுவது பர்ளாகும்)
6. பின்பு எனது இரு கைகளையும் முழங்கை உட்பட வலதை இடதிற்கு முன்னர் மூன்று தடவைகள் கழுவுவேன். மேலும் எனது இரு கைகளின் விரல்களையும் தேய்த்துக் கழுவுவேன். (இரு கைகளையும் ஒரு தடவை கழுவுவது பர்ளாகும்)
7. பின்பு எனது தலையின் அனைத்து பகுதியையும் மூன்று தடவைகள் தண்ணீரால் நான் தடவுவேன். (தலையின் சில பகுதியை ஒரு தடவை தண்ணீரால் தடவுவது பர்ளாகும்)
8. பின்பு எனது காதுகளின் உட்பகுதி மற்றும் வெளிப்பகுதியை மூன்று தடவைகள் தண்ணீரால் தடவுவேன் (இது ஸுன்னத்தாகும்)
9. பின்பு எனது இரு கால்களையும் கரண்டைக் கால் உட்பட வலதை இடதிற்கு முன்னர் மூன்று தடவைகள் கழுவுவேன். மேலும் எனது இரு கால்களின் விரல்களையும் தேய்த்துக் கழுவுவேன். (இரு கால்களை ஒரு தடவை கழுவுவது பர்ளாகும்)
10. மேற்கூறப்பட்ட பிரகாரம் ஒழுங்கு முறைப்படி செய்வேன். (இவ்வாறு ஒழுங்கு முறைப்படி செய்வது பர்ளாகும்)
வுழூ செய்த பின் பின்வருமாறு நான் கூறுவேன்.
أَشهَدُ أَنْ لاَ إِلهَ إِلَّا اللهُ وَحدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمدًا عَبدُهُ وَرسُولُهُ
اللهم اجْعَلْنِي مِنَ التَّوّابِيْنَ وَاجعَلنِي منَ المتطَهِّرِينَ
(இது ஸுன்னத்தாகும்)
எனவே வுழூ உடைய பர்ளுகள் மொத்தமாக ஆறு உள்ளன. அவைகள்:-
01) நிய்யத்து வைத்தல்.
02) முகத்தை கழுவுதல்.
03) இரு கைகளையும் முழங்கை உட்படக் கழுவுதல்.
04) தலையின் சில பகுதியை மஸ்ஹு செய்தல்.
05) இரு கால்களையும் கரண்டை கால் உட்படக் கழுவுதல்.
06) மேற்கூறியவற்றை ஒழுங்கு முறைப்படி செய்தல்.
ஆக்கம்:-
மௌலவி முஹம்மத் ரிஸ்மி (ரிஸ்வி, அஷ்அரி)