கடன் சுமை நீங்க ஓதவேண்டிய துஆ...!
ஒரு மனிதன் தனக்கு நிகழக்கூடிய இக்கட்டான ஓர் நிலையில் பிற மனிதர்களிடம் கடன் வாங்குவதை இஸ்லாம் அங்கீகரித்துள்ளது. இருந்தாலும் இந்தக் கடன் சுமைகள் அதிகரிக்கின்ற பொழுது மனிதர்களுக்கு அதுவும் ஓர் பெரும் சுமையாக மாறிவிடுகின்றது.
ஆகவே கடன் சுமைகளிலிருந்து நீங்குவதற்கு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அருமையான, அழகான ஓர் துஆவைக் கற்றுத் தந்துள்ளார்கள். அது என்னவென்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ غَلَبَةِ الدَّيْنِஅல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஃகலப்பதித் தைன்,
பொருள்:-
இறைவா! கடன் சுமை அதிகரித்தல் ஆகியவற்றிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்.
இந்த ஹதீசை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரழி) அறிவிக்கின்றார்கள்.
(ஆதாரம்:- நஸயீ - 5,380)
எனவே இந்த துஆவை அதிக அதிகமாக எங்களுடைய வாழ்வில் ஓதிக் கொள்வோம். மேலும் கடன் தொல்லைகளில் இருந்து எங்களை முற்று முழுதாகப் பாதுகாத்துக் கொள்வோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேர்களுடைய துஆக்களையும் கபூல் செய்து கொள்வானாக...
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!