நாங்கள் ஒவ்வொருவரும் எமது வாழ்வில் ஏராளமான துஆக்களை செய்திருப்போம். எனவே அந்த துஆக்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படக்கூடிய நேரங்கள் இர...
நாங்கள் ஒவ்வொருவரும் எமது வாழ்வில் ஏராளமான துஆக்களை செய்திருப்போம். எனவே அந்த துஆக்கள் அல்லாஹ்விடம் அங்கீகரிக்கப் படக்கூடிய நேரங்கள் இருக்கின்றன.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஒரு சில நேரங்களைச் சுட்டிக்காட்டி இந்த நேரங்களில் நீங்கள் உங்களுடைய துஆக்களை கேளுங்கள். இந்த நேரங்களில் செய்யப்படும் துஆ இறைவனிடத்தில் நிச்சயமாக அங்கீகரிக்கப்படும் என்று சில நேரங்களை எமக்குக் காட்டித் தந்துள்ளார்கள். எனவே அந்த நேரங்களை இப்பொழுது நாம் சுருக்கமாக பார்க்க இருக்கிறோம்.
ஒவ்வொரு தொழுகையினுடைய இறுதியிலும் கேட்கப்படும் துஆ.🔶️ அதாவது ஸலாம் கொடுப்பதற்கு முன்னர் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.
(புஹாரி:- 538 / முஸ்லிம்:- 204)
அதானுக்கும், இகாமத்துக்கும் இடையில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.
(திர்மிதி:- 212)
ஜம்ஜம் நீர் குடிக்கும் போது கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.
(இப்னு மாஜா:- 3,062)
தொழுகையின்போது சஜ்தாவில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.🔶️ அதாவது தொழுகையில் சுஜூதில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.
(புஹாரி:- 46 / 4,925)
🔶️ இவ்வாறு சுஜூதில் கேட்கப்படும் துஆ கட்டாயமாக அரபு மொழியிலேயே கேட்கப்பட வேண்டும். மேலும் அரபு மொழி தெரியாதவர்கள் தனக்குத் தெரிந்த மொழியில் தன்னுடைய உள்ளத்தினால் கேட்க முடியும். மாறாக வாயினால் மொழிய முடியாது.
இரவின் கடைசிப் பகுதியில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.🔶️ அதாவது இரவின் மூன்றில் கடைசிப் பகுதி. தஹஜ்ஜத் உடைய நேரம் ஆகும்.
(புஹாரி:- 5,411 / முஸ்லிம்:- 857)
ஜும்ஆ உடைய தினத்தில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும்.🔶️ அதாவது ஜும்ஆவுடைய நாளில் ஒரு நேரத்தில் துஆ அங்கீகரிக்கப்படும் என ஹதீஸ்களில் வந்துள்ளது. அந்த நேரம் எதுவென்பதை தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.
(புஹாரி:- 538 / முஸ்லிம்:- 204)
🔶️ என்றாலும் சில அறிஞர்கள் அது இமாம் மின்பரில் குத்ப்பா செய்யக்கூடிய நேரம் என்பதாகவும்,
🔶️ மேலும் சில அறிஞர்கள் அஸருடைய நேரம் என்பதாகவும் குறிப்பிடுகின்றார்கள்.