நாம் எமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவைகள் அல்ஹம்துலில்லாஹ் என்ற இவ்வாசனத்தை மொழிந்திருப்போம். ஆனால் எம்மில் பலருக்கு ...
நாம் எமது அன்றாட வாழ்க்கையில் ஒரு நாளைக்கு எத்தனையோ தடவைகள் அல்ஹம்துலில்லாஹ் என்ற இவ்வாசனத்தை மொழிந்திருப்போம். ஆனால் எம்மில் பலருக்கு இந்த அல்ஹம்துலில்லாஹ் என்கின்ற இப்பதத்தின் மகத்துவங்களை அறியாமலேயே உள்ளோம்.
அல்ஹம்துலில்லாஹ் என்றால் அதற்குத் தமிழ் பதம் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. என்பதாகும்.
அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லக்கூடிய வர்களுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய சிறப்புக்கள் என்ன என்பது பற்றி எம் அருமை நாயகம் ﷺ அவர்கள் அருமையாகச் சொல்லிக் காட்டியுள்ளார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "அல்லாஹ் ஒரு அடியானுக்கு அருட்கொடை ஒன்றை வழங்க அவர் அதற்குப் பதிலாக அல்ஹம்து லில்லாஹ் என்று நன்றியுடன் கூறினால் அவர் முன் பெற்றதைவிட மேலான ஒன்றை அவருக்கு அல்லாஹ் வழங்குவான்"
(இப்னு மாஜா:- 3,805)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இடம் நாம் ஒன்றை கேட்கிறோம். நாம் கேட்ட ஒன்றை அவன் நமக்குக் கொடுக்கிறான் என்றால் நாம் மீண்டும் அதற்குப் பதிலாக அல்ஹம்துலில்லாஹ் என்று சொன்னாள் நமக்குத் தந்ததை விட சிறப்பான ஒன்றை அல்லாஹ் நமக்கு வழங்காமல் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ﷺ அவர்கள் சொன்ன செய்தி இப்னு மாஜா என்கின்ற ஹதீஸ் கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறிய செய்தி:- "திக்ர்களிலேயே மகவும் சிறந்த திக்ர் லா இலாஹ இல்லல்லாஹ் மேலும் துஆக்களிலேயே மிகவும் சிறந்த துஆ அல்ஹம்துலில்லாஹ்"
(திர்மிதி:- 3,800)
எனவே நாம் அல்லாஹ்வை திக்ர் செய்கின்ற பொழுது லா இலாஹ இல்லல்லாஹ் என்ற இக்கலிமாமை அதிகம் அதிகம் உச்சரிக்க வேண்டும். அதேபோன்று எமது அத்தனை பிரார்த்தனைகளிலும் அல்ஹம்துலில்லாஹ் என்ற இறைவனை புகழக்கூடிய இந்த துஆவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.