ஜின்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைந்த செய்தியை அல்லாஹுத்தஆலா தனது அருள் மறையாம் திருக்குரானில் 46வது அத்தியாயத்தில் 29ஆம் வச...
ஜின்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்திற்குள் நுழைந்த செய்தியை அல்லாஹுத்தஆலா தனது அருள் மறையாம் திருக்குரானில் 46வது அத்தியாயத்தில் 29ஆம் வசனத்திலிருந்து 32 ஆம் வசனம் வரைக்கும் சொல்லிக்காட்டுகிறான்.
(நபியே) இந்தக் குர்ஆனை கேட்கும் பொருட்டு, ஜின்களில் சிலரை நாம் உங்களிடம் வருமாறு செய்து, அவர்கள் வந்த சமயத்தில் (அவர்கள் தங்கள் மக்களை நோக்கி) "நீங்கள் வாய் பொத்தி (இதனைக் கேட்டுக் கொண்டு) இருங்கள்." என்று கூறினார்கள். (இது) ஓதி முடிவு பெறவே, தங்கள் இனத்தார்களிடம் சென்று அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய முற்பட்டனர்.
(அல்குர்ஆன்:- 46 : 29)
(அவர்களை நோக்கி) "எங்களுடைய இனத்தார்களே!... நிச்சயமாக நாங்கள் ஒரு வேதத்தைச் செவியுற்றோம். அது மூஸாவுக்குப் பின்னர் அருளப்பட்டிருக்கின்றது. அது, தனக்கு முன்னுள்ள வேதங்களையும் உண்மைப்படுத்துகின்றது. அது சத்தியத்திலும், நேரான வழியிலும் செலுத்துகின்றது.
(அல்குர்ஆன்:- 46 : 30)
எங்களுடைய ஜின் கூட்டத்தினரே!... அல்லாஹ்வின் அளவில் அழைப்பவர்களுக்குப் பதில் கூறி, அவரை நம்பிக்கைக் கொள்ளுங்கள். உங்களுடைய பாவங்களை (அல்லாஹ்) மன்னித்தும் விடுவான். துன்புறுத்தும் வேதனையிலிருந்து உங்களைக் காப்பாற்றுவார்.
(அல்குர்ஆன்:- 46 : 31)
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூற வில்லையோ (அவனை நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பான். தண்டனையிலிருந்து தப்ப) அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வை தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வையன்றி, அவனுக்கு பாதுகாப்பாளர் ஒருவருமில்லை. (அவனைப் புறக்கணிக்கும்) இத்தகையவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் தான் இருப்பார்கள்."
(அல்குர்ஆன்:- 46 : 32)
ஆக இந்த வசனங்களின் மூலமாக அல்லாஹுத்தஆலா ஜின் கூட்டத்தினருக்கு மத்தியில் நடந்த நிகழ்வுகளை அவனுடைய மற்றுமோர் படைப்பினமான மனித இனத்திற்கு ஓர் படிப்பினையாகக் கூறுகின்றான்.
மேலும் அல்லாஹ்வையும், அவனுடைய இரஸுலையும் யாரெல்லாம் புறக்கணித்து வாழ்கின்றார்களே அவர்கள் ஒருபோதும் இறைவனை ஏமாற்ற முடியாது. மரணத்திலிருந்தும் தப்பி விட முடியாது. அவர்களின் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பு. அவர்கள் இந்த உலகத்தில் சம்பாதித்தவையே மறு உலகத்தில் அவர்களுக்கு பிரதிபலிக்கும். சம்பாதித்தவைகள் நன்மையாக இருந்தாலும், சரி தீமையாக இருந்தாலும் சரி நிச்சயமாக அதற்கான பிரதிபலிப்பை அந்தத் தீர்ப்பு நாளில் அடைத்தே தீர்வார்கள்.
எனவே அல்லாஹுத்தஆலா நம் அத்தனைப் பேர்களையும் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் பொருத்தமான வழியிலே வாழ்வதற்கு எமது கடைசி மூச்சு வரைக்கும் கிருபையளிப்பானாக. மேலும் மரணத்திற்குப் பின்னாலும் அவனுக்குப் பொருத்தமான அடியானாக எங்கள் அனைவர்களையும் ஆக்கி அருள்வானாக...!
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
Aameen
ReplyDelete