சுவனமும் அல்லாஹுவின் படைப்புதான். ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ் வின் படைப்பாவார்கள். இருந்தாலும் அல்லாஹ...
சுவனமும் அல்லாஹுவின் படைப்புதான். ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அல்லாஹ் வின் படைப்பாவார்கள். இருந்தாலும் அல்லாஹ்வுடைய படைப்புகளிலே விசேஷமானவர்கள், மரியாதைக்குரியவர்கள், மகத்துவமானவர்கள் ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆவார்கள்.
ஆக சுவனத்தை விட மகத்துவம் வாய்ந்தவர்கள் ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்.
உங்களுக்குத் தெரியுமா..? ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்ற இடம் சுவனமாக மாறியுள்ளது. அதுதான் "ரியாலுல் ஜன்னாஹ்". அதனால் தாான் சுவனத்தைவிட தரஜா அதிகம் நம் கண்மணி நாயகம் ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத்் தான்.
சுவனம் கிடைத்தவர்க்கு ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிடைக்காமல் இருந்து இருக்கலாம். ஆனால் ஸையிதினா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு வஸல்லம் கிடைத்தவர்களுக்கு கண்டிப்பாக சுவனம் கிடைத்தேதீரும்.
அதனால், சுவனத்தை கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படுவதை விட ஸையிதினா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிடைக்கவேண்டும் என்று ஆசைப்படவேண்டும். அவர்களின் குடும்பத்தார்களை கண்ணியப்படுத்த வேண்டும். அவர்களை பிரியப்படவேண்டும். அவை தான் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் வேண்டும்.
எனவே ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு வஸல்லம் அவர்களின் மீது அளவுகடந்து அன்பும் நேசமும் வையுங்கள். பிள்ளைகளுக்கும் அவர்களைப் பற்றிச் சொல்லிக்கொடுங்கள். மேலும் அதிக அதிகமாக ஸலவாத்து ஓதுங்கள்...
இந்த ஸலவாத்தை ஒருவிடுத்தம் ஓதினால் 600000 ஓதிய நண்மை கிடைக்கக்கூடிய ஸலவாத்து ஆகும்.
ﺍﻟﻠَّﻬُﻢَّصٙلِّ وٙسٙلِّمْ وٙبٙارِكْ عٙلىٰ سٙيِّدِنٙا مُحٙمّٙدٍ وّٰٙاٙلِهٖ وٙصٙحْبِهٖ عٙدٙدٙ مٙا فِيْ عِلْمِ اللهِ صٙلاٙةً دٙائِمةً بِدٙوٙامِ مُلْكِ الله
அல்லாஹும்ம ஸல்லி வஸல்லிம் வபாரிக் அலா ஸய்யிதினா முஹம்மதிவ் வஆலிஹீ வஷஹ்பிஹீ அதத மா fபீ இல்மில்லாஹ் ஸலாத்தன் தாயிமத்தன்(ம்) பிதவாமி முல்கி_ல்லாஹ்...
COMMENTS