من مات على حب آل بيت النبي صلى الله عليه وسلم مات شهيدا கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யார்...
கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யார் என்னுடைய குடும்பத்தார்களின் மீது அன்பு வைக்கிராரோ அவர்களுக்கு ஷஹீத் உடைய அந்தஸ்து கொண்ட மரணம் கிடைக்கும்.
(رشفة الصادي من بحر فضائل بني النبي الهادي)
யஸீத் என்ற கொடியவன் அவனின் படைகளுக்கு செய்யிதுனா ஹுசைன் (ரழி) அவர்களின் தலையை கொய்து எடுத்துவர கட்டளையிட்டான். அதே போன்று அவர்களின் தலை துண்டிக்கப்பட்டு அதை ஒரு குச்சியில் வைத்து ஒவ்வொரு ஊராக எடுத்து வரும் பொழுது எகிப்து நாட்டுக்கு வந்த பொழுது இரவானது. அவர்களுக்குள் தலையை இப்படியே வைக்கமுடியாது என்று பேசிக்கொண்டு இருக்கும் பொழுது ஒரு நஸரானி வந்து இது யாருடைய தலை என்று கேட்டார்கள். அப்பொழுது அவர் எங்களுக்கு நபியாக வந்த நபியின் பேரர் உடைய தலை. எங்களின் அரசரின் உத்தரவின் பெயரில் இதை எடுத்து செல்கிறோம் என்று படை வீரர்கள் சொன்னார்கள். அந்த நஸரானி சொன்னார் "எங்களின் ஈசா (அலை) அவர்களுக்கு ஒரு மகன் இருந்து இருந்தால் அவர்களை நாங்கள் ராஜா போன்று வைத்து பார்த்து இருப்போம். ஆனால் நீங்களோ மாமனிதரின் பேரரின் தலையை துண்டித்து வந்துள்ளீர்கள். இந்த தலையை இன்று இரவு என் வீட்டில் வைத்துக்கொள்கிறேன். அதுக்கு பகரமாக 50 திர்ஹம் தருகிறேன்." என்றதும் இந்த தலையை வைப்பதற்கு இடமும் பணமும் தருவதை பார்த்து படைவீரர்கள் உடனே சரி என்றார்கள். வீட்டிற்கு எடுத்து சென்று அந்த தலையை கண்ணியத்துடன் அவர்களின் முபாரக்கான முடியை கோதிவிட்டு அழகான முகத்தை (நாயகம் அவர்களின் முகம் போன்ற அமைப்புடையவர்கள்) அவர்களின் முபாரக்கான தலையில் முத்தமிட்டார்கள் தாயின் அருகேயே தூங்கிவிட்டார்கள். அவர்களின் கனவில் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹாலிர் ஆனார்கள். பிறகு சொன்னார்கள் "என்னுடைய பேரரை நீர் கண்ணியம் செய்ததினால் உம்மை முஸ்லீமாக ஆக்குகிறேன்." என்று ஷஹாதா கலிமாவை மொழிந்து கொடுத்தார்கள். மறுநாள் காலையில் படைவீரர்கள் வந்து தலையை கேட்டார்கள், அவர் கொடுக்க மறுத்ததினால் அவரின் உயிர் எடுக்கப்பட்டு ஷஹீது ஆனார்கள். அங்கு இருந்து தலை எடுத்து சென்றார்கள்.
இமாம்கள் சொல்கின்றார்கள்: அஹ்லு பைத்துகளின் மீது அன்பு வைத்து அவர்களுக்கு பணிவிடை செய்தால் அவர்களின் மீது வைக்கக்கூடிய அன்பு, பணிவிடை, விருந்து, கண்ணியம் அனைத்தும் கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது வைப்பதை போன்று ஆகும். மேலும் இக்கருத்தில் சூபியாக்களும் உடன்படுகிறார்கள்.
யா அல்லாஹ்! கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் அன்பும், பாசமும், அவர்களுக்கு பணிவிடை செய்யக்கூடியவர்களாக எங்களையும் எங்களின் குடும்பத்தார்களுக்கும் ஆக்கி அருள்வாயாக ஆமீன்!.....
COMMENTS