ஒரு ஸாலிஹான மனிதர் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கனவில் கண்டார்கள். கனவில் பார்த்தபொழுது அவர்கள் கண்மணி நாயகத்திடம் "நாயகமே மிக நன்மை கிடை...
ஒரு ஸாலிஹான மனிதர் கண்மணி நாயகம் ﷺ அவர்களை கனவில் கண்டார்கள். கனவில் பார்த்தபொழுது அவர்கள் கண்மணி நாயகத்திடம் "நாயகமே மிக நன்மை கிடைக்கின்ற ஒரு அமலை கற்றுத் தாருங்கள் என்று கேட்டார்கள். நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள் ஒரு வழியுல்லாஹ்வுக்கு கித்மத்திலிருந்தால் (பணிவிடை) மட்டும் போதும் அவர்களுக்கு ஒரு ஆட்டை அறுத்து ஸதகா கொடுத்த நன்மை கிடைக்குமென்றார்கள்.
அந்த நபர் மறுபடியும் கண்மணி நாயகத்திடம் "நாயகமே! இது மரணித்த வழியுல்லாஹ்விற்கா? அல்லது வாழ்ந்து கொண்டிருக்கும் வழியுல்லாஹ்விற்கா?" என்று கேட்டார்கள். அதற்கு நாயகம் ﷺ அவர்கள் "இந்த விஷயத்தில் இருவரும் ஒன்றுதான்" என்று சொன்னார்கள்.
இந்த சம்பவத்தை விளக்கமாக ஒரு பெரிய ஆலிமும், ஆரிஃபும், நஸயீயா தரீக்காவின் ஷைகு அல்லாமதுல் ஷைகு அல் தர்யீ முஹம்மது இப்னு நாஸிர் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்கமாக சொல்கிறார்கள். ஒரு வலியுல்லாஹ்வை ஒருவர் சந்திக்க சென்றால் ஒரு ஆடு அறுக்கின்ற நேரமாவது அங்கு இருந்தால் தான் இந்த நன்மைகிடைக்கும் அதற்குமேல் இருந்தால் சிறப்பாகும்.
அதிகமானோர் ஜியாரத் செய்கின்ற பெயரில் பாத்திஹாவும், சூரத் இக்லாஸும் ஓதிவிட்டு அங்கு இருந்து சென்றுவிடுகிறார்கள் அவர்களும் இதை பேணி இருப்பது அவசியமாகும்.
ஒரு வலியுல்லாஹ்வை மற்றொரு வலியுல்லாஹ்விற்குத்தான் தெரியும். எல்லா ஸாலிஹீன்களும் ஒரு வலியுல்லாஹ்வாக ஆகமுடியாது. ஆனால் எல்லா வலியுல்லாவும் ஸாலிஹீன்கள் ஆவார்கள் இதில் எந்த சந்தேகம் இல்லை.
ஸாலிஹீன்களுடைய தொடர்பு மறு உலகத்தில் வெற்றியை தரக்கூடியதாக இருக்கும். அனைவரும் ஆசைப்படக்கூடிய ஒன்றுதான் அந்தத் தொடர்பு. அது ஒரு விசேஷமான தொடர்பு ஆகும். ஃபதகுலு முயீன் கிதாபின் முஸன்னிப் ஜைனுத்தின் மக்தும் ரழியல்லாஹு அன்ஹு நாயகம் அவர்கள் ஸாலிஹீன்களை பற்றி சொல்கிறார்கள். சாலிஹீன்களை பற்றி புகழ்கிறார்கள்.
குர்ஆனில் அல்லாஹ் முஃமீன்களை பற்றி சொன்னதற்கு பிறகு சாலிஹீகளையும், உண்மையானவர்களையும் பற்றி பிடித்து கொள்ளுங்கள் இதனுடைய அர்த்தம் மறுமையிலும் அவர்களின் தொடர்பு கிடைக்கும் என்று தப்ஸீரிலே கூறுகிறார்கள்.
இந்த உலகத்தில் இருப்பவர்களில் அதிகமானோர் ஸாலிஹீன்களின் உருவத்தில் இருப்பார்கள். மறுமையின் நினைவு இல்லாமல் இருப்பார்கள். ஆனால் ஸாலிஹீன்கள் சாதாரணமாக இருப்பார்கள் அவர்கள் செய்கின்ற அமல்கள் மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்க்காக மறைத்து மறைத்து அமல் செய்வார்கள்.
பெரிய பாக்கியம் கொண்டவர்கள் ஸாலிஹீன்களிடம் இருந்தவர்கள், அவர்களிடம் முஸாபஹா செய்தர்வர்கள், பணிவிடை செய்தவர்கள், அவர்களின் துஆவை பெற்றவர்கள் எல்லாம் பெரிய பாக்கியம் கொண்டவர்கள்.
இந்த காலத்தில் பெரிய பெரிய ஸாலிஹீன்கள் எல்லாம் மறைந்து கொண்டிருக்கிறார்கள். கேரளாவிலும், இந்தியாவிலும், உலகத்திலும் ஸாலிஹீன்கள் வஃபாத் ஆகி கொண்டிருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் வாரத்தில் மட்டும் அதிகமான ஸாலிஹீன்கள் மரணித்து மறைந்திருக்கிறார்கள். இன்னும் அதிகமான ஸாலிஹீன்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், நம்மில் அதிகமானோர் நாளை அமல் செய்வோம் நாளை நாளை என்று தள்ளி போடும் அந்த நிலைப்பாடு சரியான ஒன்று கிடையாது. காலம் யாருக்கும் யாருக்காகவும் பொறுத்திருக்காது. மரணம் எந்த நேரத்திலும் வந்தடையும், எந்த நேரத்தையும் வீணாக்ககூடாது ஒவ்வொரு பொழுதையும் பயன்படுத்தி அமல் செய்யவேண்டும்.
ஸாலிஹீன்களையும், வலீமார்களையும் பிரியம் வைத்து, அவர்களின் ஷபாஅத்தும், துஆவும் பெருவதற்கும் மேலும் அவர்களுக்கு பணிவிடை செய்யக்கூடியவர்களின் கூட்டத்திலும் எங்களை சேர்த்தருள்வாயாக..! யா அல்லாஹ்..! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.......