இப்னு உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- நபிகள் நாயகம் ﷺ அன்னவர்கள் கூறினார்கள்:- "மரங்களில் ஒரு மரம் உண்டு. அது முஸ்...
(நூல் - ஸஹீஹுல் புஹாரி - பாகம் 7 : அத்தியாயம் 65 : எண் 359)
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:- (உஹதுப் போரில்) அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களுடைய தலைக் கவசம் அவர்களுடைய தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது. அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது. அவர்களுடைய (முன் வாய்ப்பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. அப்போது அழி (ரலி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி ﷺ அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தைக் கழுவி கொண்டிருந்தார்கள். இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களின் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.
நபி சல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் அனேகமாக ஈச்சம் பாய்தான் பயன்படுத்தியிருப்பார்கள்.
ஈச்சம் மரத்தின் இலை, காய், வேர், தண்டு, அது வளர்ந்த மண்ணிலும் மருத்துவம் நிறைந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.
ஈச்சம் பாய்:- வாதநோய் குணமாகும்
சோகை நீங்கும். உடல் சூடு, அதிகரிகக்கும்
ஈச்சம் மரம் நடப்பட்டுள்ள மண்ணில் பாதம் பதித்து நடந்து வந்தால் கால் பாதம் வலி கால் வெடிப்புகளுக்கு நிவாரணம் கிடைக்கும்..
ஈச்சம் மரத்தின் தண்டுகளை நீரிலிட்டு அவித்து அந்த தண்ணீரால் தலைகுளித்து வந்தால் தலையில் கட்டியுள்ள அசடுநீர் வெளியேறும். தலைப்பாரம், மந்தம், விட்டும் நிவாரணம் கிடைக்கும்.
இன்ஷா அல்லாஹ்
ஆக்கம்:-
பாத்திமா ஷா