ஒரு அறிஞர் இடத்தில் இரண்டு பேர் வந்தனர். அவ் இருவரில் ஒருவர் வருத்தத்தோடு அவ்வறிஞரைப் பார்து கேட்டார். "அறிஞரே நான் ஒரு பெரிய பாவம...
ஒரு அறிஞர் இடத்தில் இரண்டு பேர் வந்தனர். அவ் இருவரில் ஒருவர் வருத்தத்தோடு அவ்வறிஞரைப் பார்து கேட்டார். "அறிஞரே நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அந்தப் பாவத்தை நினைத்து தினமும் துடிக்கிறது. எனவே நான் செய்த பாவத்திற்கு மீட்சி உண்டா...???"
இவ்வாரு அவர் சொல்லி முடிக்க அவ்விருவரில் அடுத்தவர் அவ்வறிஞரிடம் சொன்னார் "நான் இவர் அளவுக்கு ஒன்றும் பெரிய பாவம் எல்லாம் செய்யவில்லை. ஆனால் சின்னச் சின்னப் பொய்கள், சிறு ஏமாற்றுக்கள் இப்படி நிறைய சிறிய பாவங்களை செய்துள்ளேன். தண்டிக்கும் அளவுக்கு இவை எல்லாம்
பெரிய பாவங்களா என்ன...?" என்று சர்வ சாதாரணமாக சொல்லி முடித்தார்.
இவ்விருவர்களின் கேள்வியைக் கேட்ட அவ்வறிஞர் முகத்தில் சற்று புன்முறுத்தலோடு அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார்.
முதலாவது நபரைப்பார்து "நீங்கள் சென்று ஒரு பெரிய பாறை ஒன்றை தூக்கிவாருங்கள்" என்றார். இரண்டாவது நபரைப் பார்த்து " நீங்கள் சென்று இந்த கோணி நிறைய சிறு கற்களை பொறுக்கிவாருங்கள்." என்றார்.
பின்பு அவ்விருவரும் அவ்வாறே செய்தனர். முதலாவது நபர் ஒரு பெரிய பாறையை தூக்கி வந்தார். அடுத்த நபர் கோணி நிறைய சிறு கற்களைப் பொறுக்கிக் போட்டுக் கொண்டு வந்தார்.
இப்போது அவ்வறிஞர் சொன்னார். "சரி, நீங்கள் இருவரும் கொண்டு வந்த கற்களை எல்லாம் சரியாக எந்த இடத்தில் எடுத்தீர்களோ அங்கேயே அதே இடத்திலேயே மீண்டும் சென்று போட்டு விட்டு வாருங்கள்." என்றார்.
முதலாவது நபர் அப்பாறையை எடுத்துக் கொண்டு போய் எந்த இடத்தில் எடுத்தாறோ அதே இடத்தில் வைத்து விட்டு திரும்பினார். ஆனால் அவ்விரன்டாவது நபர் தயக்கத்துடன் "இவ்வளவு கற்களை நான் எப்படி சரியாக அவை இருந்த இடத்திலேயே வைக்க முடியும்? என்று கேட்டார்.
அந்த நேரத்தில்தான் அவ்வறிஞர் அம்மனிதனை பார்த்து கூறுகிறார் "முடியாதல்லவா! இதே போன்றுதான் இன்று இருவரது செயல்களும்.
அவர் பெரிய தவறு செய்தார். அதற்காக வருந்தி அழுது அல்லாஹ்விடம் தவ்பாஃ செய்து செய்து அவர் மீட்சி அடையலாம். ஆனால் நீங்கள் சின்னச் சின்னதாக ஆயிரம் தவறுகளைச் செய்தும் அவைகளை பாவம் என்று கூட எண்ணமில்லை. மேலும் யாரெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்
என்று கூட உங்களுக்கு நினைவிருக்காது".
மேலும் அவ்வறிஞர் கூறினார்:- "பெரும் பாவங்கள் செய்த அடுத்த நபருக்கு தவ்பாஃ கேட்டு பாவத்திலிருந்து மீலுவது என்பது அவருக்கு இலகுவான ஒரு விடயம். ஆனால் உங்களால் இலகுவான முறையில் பாவத்திலிருந்து மீளமுடியாது என்றதும் அம்மனிதர் வெட்கத்தால் தலைகுனிந்து போய் நின்றார்.
எனவேதன் சகோதரர்களே! நாங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு காரியங்களும், செயல்களும் பதியப்பட்டு கொண்டிருக்கின்றன. இவைகளுக்கு ஒரு நாள் நாங்கள் கண்டிப்பாக பதில் சொல்லியே ஆக வேண்டும். எனவே சிந்தித்து செயல்படுவோம்.
அல்லாஹ் எங்களுடைய முந்தைய பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருள்வாயாக.! மேலும் இனியும் பாவங்களிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பானாக!!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.