ரப்புல் ஆலமீன் அல்லாஹ் பொதுவாக நம் அருமை நாயகம் ﷺ அவர்களின் மீது சலவாத்துச் சொல்வதற்கு எண்ணற்ற கூழிகளையும், நன்மைகளையும் நிறையவே வாரி வழங்கு...
ரப்புல் ஆலமீன் அல்லாஹ் பொதுவாக நம் அருமை நாயகம் ﷺ அவர்களின் மீது சலவாத்துச் சொல்வதற்கு எண்ணற்ற கூழிகளையும், நன்மைகளையும் நிறையவே வாரி வழங்குகிறான். அதிலும் சிரேஷ்டமாக ஏழை எளியவர்களின் திருநாளான புனித ஜும்ஆவுடைய தினத்தில் அருமை நாயகம் ﷺ அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதற்கு மிகச் சிறப்பான கூழிகளை வைத்திருக்கிறான். அக்கூழிகள் என்னவென்பதை குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்புகளில் இருந்து பார்க்கலாம்.
01) அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்:- "ஜூம்ஆ நாளில் என் மீது அதிகம் ஸலவாத்துச் சொல்லுங்கள், நிச்சயமாக நீங்கள் சொல்லும் ஸலவாத்து எனக்கு எடுத்து காண்பிக்கப்படுகிறது."
(ஆதாரம்:- அபுதாவூத்-883)
02) ‘‘உங்களுடைய நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும். எனவே நீங்கள் வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள். ஏனென்றால் உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படும்’’ என்று நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் மண்ணோடு மண்ணாக மக்கிப் போன நிலையில் நாங்கள் சொல்கின்ற ஸலவாத் எப்படி உங்களுக்கு எடுத்துக்காட்டப்படும்?’’ என்று கேட்டனர். அதற்கு நபியவர்கள், ‘‘இறைவன் நபிமார்களுடைய உடல்களை (சாப்பிடுவதை விட்டும்) பூமிக்குத் தடை செய்து விட்டான்’’என்றார்கள்.
(நூல்:- அபுதாவூத்-1049)
03) அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்:- "என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.
(ஆதாரம்:- ஸஹீஹ் முஸ்லிம்-687)
04) இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.
(அல்குர்ஆன்:- 33:56)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கூறும் ஸலவாத்துக்களில் மிக ஏற்றமான ஸலவாத்து
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம, வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீதுன் மஜீத்.
(ஆதாரம்:- புகாரி-4797)