நபிகள் ﷺ அவர்களின் உபதேசங்கள்
“அழியே! நீங்கள் ஐந்து விசயத்தை தினமும் செய்யாமல் உறங்கவேண்டாம்.
01) முழுக் குர்ஆனையும் ஓதாமல் உறங்க வேண்டாம்.
02) தினமும் 4000 தீனார்கள் தர்மம் செய்யாமல் உறங்க வேண்டாம்.
03) கஃபதுல்லாஹ்வை தவாபு செய்யாமல் உறங்க வேண்டாம்.
04) சுவர்க்கத்தில் உங்கள் இடத்தை பாதுகாக்காமல் உறங்க வேண்டாம்.
05) உங்கள் எதிரியைக் (இச்சை) கொல்லாமல் உறங்க வேண்டாம்.
அதற்கு ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், “நாயகமே! அனைத்தும் ஒரே இரவில் எப்படி சாத்தியம் என கேட்க...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:-
01) ஸூரதுல் இஷ்லாஸ் (குல்ஹூவல்லாஹூ சூராவை) 3 முறை ஓதினால் குர்ஆன் முழுவதும் ஓதிய நன்மை பெறுவீர்.
02) சூரத்துல் பாத்திஹாவை 4 முறை ஓதினால் 4000 தீனார்கள் தர்மம் செய்த நன்மை பெறுவீர்.
03) நான்காம் கலிமாவை 10 முறை ஓதினால் கஃபாவை தவாபு செய்த நன்மை பெறுவீர்.
04) (லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யுல் அளீம்) என்று 10 முறை ஓதினால் சுவனத்தில் உமது இடத்தைப் பாதுகாத்த நன்மையை பெறுவீர்.
05) அஸ்தஃபிருல்லாஹல் அளீம் வஅதூபு இலைஹி என 10 முறை ஓதினால் உமது எதிரியைக் கொன்றதற்கு சமம் என கூறினார்கள்.
இன்ஷா அல்லாஹ் இதன் மூலம் நாமும் பயன் பெற்று மற்றவர்களுக்கு நன்மை பெற செய்வோம்.