கலாக் கத்ர் என்றால் நடைபெறும் நலவுகள், கெடுதிகள் யாவும் அழ்ழாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரமே நிகழ்கின்றன என்பதை ஈமான் கொள்ளுதலே ஆகும். நட...
கலாக் கத்ர் என்றால் நடைபெறும் நலவுகள், கெடுதிகள் யாவும் அழ்ழாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரமே நிகழ்கின்றன என்பதை ஈமான் கொள்ளுதலே ஆகும்.
நடைபெறும் நலவுகள், கெடுதிகள் யாவும் அழ்ழாஹ்வின் ஏற்பாட்டின் பிரகாரமே நிகழ்கின்றன என்பதற்கு சான்றாக அழ்ழாஹ் அல்-குர்ஆனில் பின்வருமாறு கூறியுள்ளான்:-
"நிச்சயமாக நாம் அனைத்தையும் விதிப்பிரகாரமே படைத்துள்ளோம்."
அத்தியாயம்: அல்-கமர் வசனம் : 46
மேலும் இதற்கு ஆதாரமாக அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:-
"ஈமான் கொள்ளுதல் என்பது அழ்ழாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும், இறுதி நாளையும் இன்னும் அழ்ழாஹ்வினால் படைக்கப்பட்ட நல்லவைகள், தீயவைகள் யாவும் அவனது ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்று ஈமான் கொள்வதாகும்."
அறிவித்தவர் : இமாம் முஸ்லிம் றஹிமஹுழ்ழாஹ்.
இது அழ்ழாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லழ்ழாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்த விடயங்களில் உள்ளதாகும்.
அழ்ழாஹ்வின் ஏற்பாட்டை நம்பிக்கை கொள்வதின் அர்த்தம்:- நிச்சயமாக அழ்ழாஹ்வினால் படைக்கப்பட்ட நலவுகள், கெடுதிகள் யாவும் அவனது ஆரம்பமில்லாத ஏற்பாட்டின் பிரகாரமே நடைபெறுகின்றன. என நம்பிக்கை கொள்வதாகும்.
எனவே அடியார்கள் செய்யும் நலவுகள் யாவும் அழ்ழாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டும், பொருத்தத்தைக் கொண்டதாகும். மேலும் அடியார்கள் செய்யும் கெடுதிகள் யாவும் அழ்ழாஹ்வின் ஏற்பாட்டைக் கொண்டும், அவனுடைய அறிவுக்கு உட்பட்டதாகும். என்றாலும் அவைகள் அழ்ழாஹ்வின் பொருத்தத்தைக் கொண்டல்ல.
ஆக்கம்:-
மௌலவி ரிஸ்மி (ரிஸ்வி, அஷ்அரி)