ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் பார்ப்பதற்க்கான வழிமுறைகள் 01) ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரலியல்லாஹூ...
ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கனவில் பார்ப்பதற்க்கான வழிமுறைகள்
01) ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரலியல்லாஹூ அன்ஹு) சொல்கிறார்கள்:- "ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை யாரேனும் கனவில் பார்க்க ஆசைப்படடாள் தூங்குவதற்கு முன்பு 22 தடவைகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று சொல்லி விட்டு தூங்குங்கள்".(கிதாப்:- ஸஆததுத்தாரைன் பிஸ்ஸலாதி ஆலா ஸெய்யிதில் கௌனைன்)
(பக்கம் : 492)
02) மேலும் ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்:- "ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான நலாயினின் (காலனிகள்) படத்தை யார் அவர்களிடம் வைத்துக் கொண்டு இருக்கிறார்களோ!அவர்களுக்கு கண்மனி நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணக்கூடிய பாக்கியம் கிடைக்கும்".
03)
نَعَمْ سَرٰى طَيْفُ مَنْ أَهْوٰى فَـأَرَّقَنِي
وَالْحُبُّ يَعْتَـرِضُ اللَّـذَّاتِ بِالأَلَـمِ
04) மேலும் ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரலிஅல்லாஹூ அன்ஹு) அவர்கள் சொல்கிறார்கள்:- "யார் ஒருவர் 3௦௦௦ தடவைகள் சூரத் இக்லாசை ஓதி அதற்க்குப் பிறகு முடிந்த அளவிற்கு ஸலவாத்து ஓதி கொண்டே இருக்கிறாறோ அவர்களுக்கு ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணும் பாக்கியம் கிடைக்கும்" என்று கூறுகிறார்கள்.
05) யார் ஒருவர் ஜூம்ஆ தொழுகைக்குப் பிறகு சுப்ஹானல்லாஹ் வல் ஹம்துலில்லாஹ் என்று 100 தடவையும், அஸர் தொழுகைக்குப் பிறகு உம்மி ஸலவாத்தை 1000 தடவைகள் ஓதி வந்தால் ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணலாம் என்று ஸையிதுனா யூஸூப் அல் நப்ஹானீ (ரழியல்லாஹூ அன்ஹு) கூறுகிறார்கள்.
06) இமாம் கஸ்தல்லானி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் (சூரதுல் பீல் மகத்துவத்தை பற்றி கூறும் பொழுது) யார் ஒருவர் ஒவ்வொரு நாளும் சூரதுல் பீலினை 1000 தடவைகள் ஓதிவந்தால் ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கானும் பாக்கியம் கிட்டும். மேலும் எதிரிகளிடமிருந்தும் பாதுகாப்பு கடைக்கும் என்று கூறுகிறார்கள்.
07) ஸையிதுனா அபுல் காஸிமில் சிபுக்கி (ரழியல்லாஹூ அன்ஹு) அவர்கள் எழுதிய (உதுரில் முழல்லமின்) எனும் கிதாபில் கூறுகிறார்கள்:- "ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:-
اَللّهُمَّ صَلِّ عَلَى رُوْحِ سَيَّدِنَا مُحَمَّدٍ فِيْ الأَرْوَاحِ وَعَلَى جَسَدِهِ فِيْ الْأَجْسَادِ وَعَلَى قَبْرِهِ فِي الْقُبُوْرِ
08)
اللهم صل علي سيدنا محمد عبدك ونبيك ورسولك النبي الأمي وعلي آله وصحبه وسلم
(கிதாப் :- ஸஆததுத்தாரைன் பிஸ்ஸலாதி ஆலா ஸெய்யிதில் கௌனைன்)
(பக்கம் :- 488 )
09) தாஜுஸ் ஸலவாத்
யார் இந்த ஸலவாத்தை ஒவ்வொரு நாளும் 7 தடவை ஓதிவந்தால் ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் பார்க்காமல் மரணிக்கமாட்டார் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹும்ம ஸல்லி அலா செயிதினா வமௌலானா முஹம்மதின் சாஹிபித்தாஜி வல் மிஃராஜி வல் புராக்கி வல் அலம். தாஃபிஇல் பலாஇ வல் வபாயி வல்கஹ்த்தி வல் மரளி வல் அலம். இஸ்முஹு மக்தூபுன் மர்ஃபூவுன் மஷ்ஃபூஉன் மன்கூஸுன் ஃபில் லவ்ஹி வல்கலம் செய்யிதில் அரபி வல் அஜமி ஜிஸ்முஹு முகத்தஸுன் முஅத்தருன் முதஹ்ஹருன் முனவ்வருன் ஃபில் பைத்தி வல்ஹரம்.
ஸம்ஸில்லுஹா பத்ரித்துஜா ஸத்ரில் உலா நூரில் ஹுதா கஹ்ஃபில் வரா மிஸ்பாஹிள்ளுளம் ஜமீலிஸ் ஸியம் ஸஃபீஇல் உமம் ஸாஹிபில் ஜூதி வல்கரமி வல்லாஹு ஆசிமுஹு வஜிப்ரீலு ஹா(H)திமுஹு வல் புராக்கு மர்கபுஹு வல்மிஃராஜு ஸஃபருஹு வஸித்ரத்துல் முன்தஹா மகாமுஹு வகாப கவ்ஸைனி மத்லூபுஹு வல் மத்லூபு மக்ஸுதுஹு வல் மக்ஸூது மவ்ஜூதுஹு ஸய்யிதில் முர்ஸலீன் ஹா(H)த்தமுன் னபிய்யீன் ஷஃபீஇல் முத்னிபீன் அனீஸில் ஙராயிபீன் ரஹ்மத்தன் லில்ஆலமீன் ராஹத்தில் ஆஸிக்கீன் முராதல் முஸ்தாக்கீன் ஷம்ஸில் ஆரிஃபீன் ஸிராஜிஸ்ஸாலிகீன் மிஸ்பாஹில் முகர்ரபீன் முஹிப்பில் ஃபுகராயி வல் மஷாகீன் ஸய்யிதி தக்கலைனி நபிய்யில் ஹரமைனி இமாமில் கிப்லதைனி வஸீலத்தினா ஃபித்தாரைனி ஸாஹிபி காப கவ்ஸைனி மஹ்பூபிரப்பில் மஸ்ரிகைனி வல் மஃரிபைனி ஜத்தில் ஹஸனி வல் ஹுஸைனி மவ்லானா வமவ்லா தக்கலைனி அபில்காஸிமி முஹம்மதிப்னி அப்தில்லாஹி நூரின் மின் நூரில்லாஹி யாஅய்யுஹல் முஸ்தாக்கூன பிநூரி ஜமாலிஹி ஸல்லூ அலைஹி வஆலிஹி வஅஸ்ஹாபிஹி வஸல்லிமூ தஸ்லீமா.
10) யார் ஓருவர் வெள்ளிக்கிழமை இரவில் சூரத்துல் கவ்தர் 1000 தடவைகள் ஓதி ஒவ்வொரு தடவையும் சூரத்துல் கவ்தர் ஓதிய பிறகு ஒரு ஸலவாத்தை ஓதிவந்தால் ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் காணலாம் என்று சில இமாம்கள் கூறுகிறார்கள்.
மேலும், உங்களின் மகத்துவமான துஆக்களில் எங்களையும், எங்களின் குடும்பத்தார்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நாம் செய்யும் இந்த அமலை அல்லாஹ் ஏற்றுக்கொண்டு ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவிலும் நினைவிலும் பார்க்க கூடிய பாக்கியத்தை அருள்வானாக.
யா ரசூலுல்லாஹ் ! உங்களை பார்க்க கூடிய பக்கியத்தை எங்களுக்கும் நஸீபாக்கி தாருங்கள் எங்களின் நாயகமே...! ஆமீன்.
اللهم ارزقنا رؤيته سيدنا رسول الله ﷺ يقظة وفي المنام على صورته الحقيقية .اللهم آمين يا رب العالمين بجاه سيد المرسلين صلى الله عليه وسلم
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்