உருவமற்ற உள்ளமையில் வல்லமை உடைய எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹு சுபுஹானஹு தஆலா மனிதர்களுக்கு கட்டளை இட்டான். 01) என்னை மாத்திரமே இறைவனாக ...
உருவமற்ற உள்ளமையில் வல்லமை உடைய எல்லாம் வல்ல இறைவன் அல்லாஹு சுபுஹானஹு தஆலா மனிதர்களுக்கு கட்டளை இட்டான்.
01) என்னை மாத்திரமே இறைவனாக வணங்க வேண்டும்.
02) நபிமார்களுக்கும், ரஸூல்மார்களுக்கும் அருளிய இறை வேதத்தை ஓதவேண்டும்.
03) தொழு, நோன்பு நோற்க வேண்டும்.
04) திக்ர், தஸ்பீஹு ஓதவேண்டும்.
05) பிற மனிதர்களுக்கு அநீதி இளைக்க கூடாது.
06) மனிதரை மனிதர் நேசிக்கவேண்டும்.
07) மது, விபச்சாரம் கூடாது.
08) செய்யும் தொழிலில் நீதமாக செயல்படவேண்டும்.
09) கொலை செய்யக் கூடாது,
இதை பேணி நடப்பவர்களுக்கு சுவனம் கொடுப்பேன் என்றான் அல்லாஹ்
****************************************
அல்லாஹ் சொன்ன கட்டளை படி,
அதில் ஒரு யூதர் வாழ்நாள் முழுவதும் தவறு செய்யாமல் இறந்த பின் அல்லாஹ்வின் முன் நற்காரியங்களோடு அந்த யூதர் சென்றார்.
யா அல்லாஹ் நீ கூறிய எல்லா நற்காரியங்களையும் செய்து வந்து விட்டேன்.
நீ எனக்கு சொன்னபடி சுவர்க்கம் கொடு என்றார் அந்த யூதர்.
உதாரணம்:-
ஒரு நிறுவனத்தில் ஒருவர் பனி செய்கிறார். அந்த பணியை தினமும் சரியாக எந்த தவருமில்லாமல் முடித்துவிட்டு அவர் முதலாளியிடம் ஒப்படைத்துவிடுகிறார்.
தினமும் அவர் பணியை ஒப்படைக்கும் போது பணியை தவிர அவர் முதலாளியிடம் வேறெந்த துடர்பும் இல்லாமல் (சிரிப்பு, பாசப்பார்வை) போன்று எந்த செயலும் இல்லாமல் பணி விஷயத்தில் நேர்மையாக இருந்தாலும் அவரின் செயலில் நற்குணம் இல்லாததால் முதலாளி கோபமுற்று அந்த மனிதரை பணியில் இருந்து நீக்கிவிடுவார்.
அதே போல் தான்....
அல்லாஹுவிடம் அந்த யூதரும் முன் நின்று என் பணியை முழுமைப்படுத்திவிட்டேன். நீ வாக்குக்கொடுத்தபடி சுவர்க்கம் கொடு என்று ஒரு பாசமில்லாமல், அன்பில்லாமல் கேட்கும் பொழுது அல்லாஹ் அந்த யூதனின் முழு நன்மையும், அவனையும் தூக்கி நரகில் வீசினான்.
****************************************
நம்மையை படைத்த அல்லாஹ்விற்கு முன் நாம் நிற்கும் போது நாம் உலகில் வாழ்ந்த போது செய்த எல்லா நமையையும் மறந்து நாம் குற்றம் செய்தவர்களாக தான் கூனிக் குறுகி நிற்கவேண்டும்.
அவன் நம்மை பார்த்து என் அடியானே என்று அன்போடும், பாசத்தோடும் அவனின் உள்ளமையில் உள்ள கருணையால் அவன் கொடுக்கும் பிச்சையை சந்தோசமாக ஏற்பவர்களாக இருக்கவேண்டும்.
அல்லாஹ் நமக்கு கொடுக்கும் பிச்சை மனிதன் சிந்திக்கமுடியாத அளவிற்கு அவனின் அருட்கொடையின் பிச்சை விசாலமானது.
****************************************
அவர்களை பின்பற்றினால் அல்லாஹ்வின் கருணை நமக்கு எந்த தடையும் இல்லாமல் கிடைக்கும்.
****************************************
ஸலவாத்
ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
ஆக்கம்:-
சதாம் ஹுசைன்.