இறுதி நாள் என்பது கியாமத் நாளாகும். அந்த நாளானது எம் தலைவர் இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுர் ஊதி மக்கள் தம் கப்றுகளிலிருந்து வெளியாக...
இறுதி நாள் என்பது கியாமத் நாளாகும். அந்த நாளானது எம் தலைவர் இஸ்ராபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஸுர் ஊதி மக்கள் தம் கப்றுகளிலிருந்து வெளியாகும் நேரத்திலிருந்து தொடங்குகிறது.
மண்ணரித்த சதைகள், இல்லாது போன உடல்களை அழ்ழாஹ் மீண்டும் அவைகள் இருந்தது போல் ஆக்குவான். மீண்டும் ரூஹையும் வழங்குவான். மேலும் இதுவல்லாத வேறு ஒரு பூமியின் மீது கேள்வி கணக்கிற்காக மனிதர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்கள். அப் பூமியில் மலைகளோ, கடல்களோ இருக்காது. அப்பூமியை புரட்டப்பட்ட பூமி என்று சொல்வதுண்டு.
ஒன்று சேர்க்கப்பட்ட மனிதர்கள் அனைவரினதும் செயல்கள் தராசியிலே நிருக்கப்படும். அத்தராசுக்கு நன்மை, தீமையை அளவிடுவதற்கென இரு தட்டுக்கள் உண்டு.
காபிராக மரணித்தவர்களுக்கு எந்தவொரு நன்மையும் இருக்காது. பின்னர் உலகில் வாழும் போது பாவங்களைத் தவிரந்து, கடமைகளை நிறைவேற்றி வாழ்ந்த முஃமீன்களை எந்த வேதனையுமின்றி அழ்ழாஹ் சுவனத்தில் நுழையச் செய்வான். பாவியான முஃமீன்களில் ஒரு பிரிவினரை அழ்ழாஹ் மன்னித்து எந்த தண்டனையும் இன்றி சுவனம் நுழைவிப்பான். இன்னும் ஒரு பிரிவினரை நரகில் நுழையச் செய்து தண்டனையளித்த பின்னர் சுவனம் நுழைவிப்பான். அதிலே அவர்களை நிரந்தரமாகவும் தரிபடச் செய்வான்.
காபிர்கள் ஒருபோதும் சுவனம் நுழைய மாட்டார்கள். அவர்களை அழ்ழாஹ் நரகில் நுழைவிக்கச் செய்து அதிலே நிரந்தரமாகத் தரிபடுத்தச் செய்வான்.
அல்லாஹ்வும் அவனது ரசூலும் மிக அறிந்தவர்கள்
ஆக்கம்:-
மௌலவி முஹம்மத் ரிஸ்மி (ரிஸ்வி, அஷ்அரி)