ஸூரதுல் கஸஸ் இலே மூஸா நபியின் தாயாரை பார்த்து அச்சம் கொள்ளாதீர், கவலை கொள்ளாதீர் என்று அல்லாஹ் சொல்கிறான்...! ஸூரது மர்யம் இலே மர்யம்...
ஸூரதுல் கஸஸ் இலே மூஸா நபியின் தாயாரை பார்த்து அச்சம் கொள்ளாதீர், கவலை கொள்ளாதீர் என்று அல்லாஹ் சொல்கிறான்...!
ஸூரது மர்யம் இலே மர்யம் (அலை) அவர்களைப் பார்த்து அல்லஹ் கவலைப்படாதீர் என அழைத்துச் சொன்னான்...!
ஸூரதுல் அஹ்ஸாப் இலே நபி ﷺ அவர்களின் துணைவியர்களைப் பற்றி சொல்லும் போது அல்லாஹ் "அவர்கள் கண்கள் குளிர்ச்சியடைவதற்காகவும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் இதை சொல்கிறோம்" என்று சொல்கிறான்...!
என்று பல வசனங்கள் பெண்கள் கவலைப் படக் கூடாது என்ற அர்த்தத்தில் வந்துள்ளன...!
ஏனென்றால்...
01) பெண்களின் கவலை மிக ஆழமானதாக இருக்கும்.
02) கவலையானது பெண்களின் அழகைப் போக்கி விடும்.
03) பெண்கள் கவலைப்படுவதினால் அவர்களின் ஹார்மோன் சுரப்பிகளில் பாதிப்பு ஏற்படுத்தும்.
04) கவலைப் படும் பல பெண்கள் கருத்தரிப்பதில்லை.
05) கவலைப் படும் பெண்களின் முடி விரைவில் உதிர ஆரம்பிக்கிறது.
06) கவலை படும் எத்தனையோ பெண்களின் நிறம் மங்கி விடுகின்றது.
07) அந்த கண்ணாடி குடுவைகளிடம் மிருதுவாக நடந்து கொள்ளுங்கள். முரட்டுத்தனமாக கையாண்டு அவற்றை உடைத்துவிடாதீர்.
08) வார்த்தையினால் உங்கள் தாயாரை காயப்படுத்தாதீர்கள்.
09) உங்கள் சகோதரியிடம் கடுமையாக நடந்துக் கொள்ளாதீர்கள்.
10) உங்கள் மனைவியின் உணர்ச்சிகளை புறக்கணிக்காதீர்கள்.
11) உங்கள் பெண் குழந்தைகளை புன்னகையுடன் அரவணையுங்கள்.
எப்பொழுதும் "பெண்களுக்கு நன்மையையே நாடுங்கள்" என்ற நபிமொழியை நினைவில் கொள்ளுங்கள்.