போராக்கள் எனப்படுவோர் ஷீஆக்களின் கேடுகெட்ட ஒரு பிரிவான இஸ்மாயீலிய்யா எனும் பிரிவைச் சார்ந்தவர்கள். ஷீஆக்களின் இமாம்களின் ஒருவரான ஜஃபர...
போராக்கள் எனப்படுவோர் ஷீஆக்களின் கேடுகெட்ட ஒரு பிரிவான இஸ்மாயீலிய்யா எனும் பிரிவைச் சார்ந்தவர்கள்.
ஷீஆக்களின் இமாம்களின் ஒருவரான ஜஃபர் ஸாதிக் மரணித்த பின் ஷீஆக்களில் சிலர் மூஸா என்ற அவரின் மகனே இமாம் என்பதாகவும் மற்றொரு சாரார் அவரின் மகன் இஸ்மாயீல் என்பவர்தான் இமாம் எனவும் கருத்துவேறுபாடு கொண்டனர். இஸ்மாயீலை ஏற்றுக்கொண்டோர்தான் இஸ்மாயீலிய்யா என அழைக்கப்பட்டனர்.
இவர்களில் மூன்று பிரிவினர் உண்டு.
1- தரூஸ்
2- போரா
3- ஆகானிய்யா அல்லது நிஸாரிய்யா
இம்மூன்று பிரிவுகளுமே தமது தவருக்கு தெய்வீகத்தன்மையுண்டு என நம்புவோராகும்.
இந்த இஸ்மாயீலிய்யாக்களைப் பற்றி இப்னு தைமிய்யா என்பவர் குறிப்பிடும் போது,
அல்லாஹ், அவனது தூதர், அல்குர்ஆன், ஏவல், விலக்கல், நற்கூலி, தண்டனை, சுவனம், நரகம், நபிமார்கள் முன்சென்ற மதங்கள் என எவற்றையும் யதார்த்தத்தில் இவர்கள் நம்புவதில்லை. எனக் கூறியுள்ளார்கள்.
இந்த போராக்கள் என்போர் ஹிஜ்ரி 5ம் நூற்றாண்டில் இஸ்மாயீலிய்யாக்களின் தலைவரான முஸ்தன்ஸிர் என்பவர் மரணித்த பின் அவரது புதல்வரான முஸ்தஃலீ என்பவரினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் தனது சகோதரர் நிஸார் என்பரைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றினார்.
போரா என்பதன் கருத்து என்ன?
போரா என்றால் வியாபாரிகள் என்பதாகும். இவர்களின் ஆரம்பப் பெயர் முஸ்தஃலியா அல்லது தைபிய்யா என்றே காணப்பட்டது. இவர்களின் முன்னோர்கள் யமனில் வியாபாரிகளாகக் காணப்பட்டனர். இவர்கள் இந்தியாவுக்குச் சென்று அங்குள்ள முஸ்லிமல்லாதவர்களுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட தருணத்தில் அவர்களில் சிலர் இவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டனர். அவர்களனைவரும் வியாபாரிகளாக இருந்ததனால் போரா என்ற பெயரினால் பிற்காலத்தில் அழைக்கப்பட்டனர்.
இவர்களின் இரு பிரிவினர் உண்டு.
1- தாவூதி போராக்கள். இவர்களின் தலைமையகம் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் உண்டு. இவர்களின் தலைவர் மும்பாயில் வாழ்ந்துவருகிறார்.
2- ஸுலைமானி போராக்கள். இவர்களின் தலைமையகம் யமனின் தெற்குப் பகுதியில் உண்டு.