அண்ட சராசரத்தில் இறைவனான அல்லாஹ் தன் அடியார்களான மனிதர்கள் தன்னை நெருங்குவதற்கானக ஏராளமான அமற்களை ஏற்படுத்தி அந்த ஒவ்வொரு அமலுக்கும் தன...
அண்ட சராசரத்தில் இறைவனான அல்லாஹ் தன் அடியார்களான மனிதர்கள் தன்னை நெருங்குவதற்கானக ஏராளமான அமற்களை ஏற்படுத்தி அந்த ஒவ்வொரு அமலுக்கும் தனித்தனிச் சிறப்புகளை வைத்திருக்கிறான். அதனடிப்படையில் ஜும்மா உடைய நாளில் சில அமற்களை செய்வது இறைவனை திருப்பி படுத்துவதாகவும் மேலும் எமக்கு அதிகமான நன்மைகளை தரக்கூடியதாகவும் இருந்து வருகிறது. அவைகள் என்ன என்பதை நாங்கள் குர்ஆன் ஹதீஸ் மூலமாக பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ்.
நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "வெள்ளிக்கிழமை நாளில் பருவமடைந்த ஒவ்வொருவரும் குளிப்பது கடமையாகும்."
(புஹாரி:-879 / முஸ்லிம்:-1535)
எனவே பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண் மீதும் வெள்ளிக்கிழமை நாட்களில் குளிப்பது ஒரு கடமையாகவே இருக்கிறது.
மேலும் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் வெள்ளிக்கிழமை உடைய நாளை பற்றி கூறுகையில் "அதில் ஒரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் ஒரு அடியான் இறைவனிடத்தில் தொழுகையில் ஈடுபட்ட எதைக்கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருந்ததில்லை" என்று சொல்லிக் காட்டினார்கள்.
(புஹாரி:-935 / முஸ்லிம்:-1543-5)
ஆக இந்த ஜும்மா உடைய நாட்டில் எங்களுடைய துஆக்கள் கபூல் ஆகக்கூடிய நேரம் இருக்கிறது. எனவே இந்த வெள்ளிக் கிழமை நாட்களில் எங்களுடைய துஆக்களை நாங்கள் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும்.
மேலும் அருமை நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். "வெள்ளிக்கிழமை நாள் வந்துவிட்டாள் ஒவ்வொரு பள்ளிவாசலின் நுழைவாயிலும் ஒரு மலக்கு நின்று கொண்டிருப்பார். முதலாவது பள்ளிக்குள் யார் நுழைகிறார். அடுத்தடுத்து யார் யார் நுழைகிறார்கள் என்பதை பதிவு செய்கிறார்கள். அதில் முதலாவதாக நுழைந்தவர் இறைச்சி ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றாவார் என்றும் அதுக்கு அடுத்தவர் ஒரு மாட்டை குர்பானி கொடுத்தவர் போன்றாவார் என்றும் அதற்கு அடுத்தவர் ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தவர் போன்றும் அதற்கடுத்து நுழைபவர் கோழியும் அதற்கடுத்து நுழைபவர் முட்டையும் தர்மம் செய்தவர் போல் ஆவார்.
புஹாரி:-929 / முஸ்லிம்:-1554)
எனவே இந்தப் புனிதமான ஜும்ஆவுடைய நாள் எமக்கு அதிக நன்மைகளைத் தரக்கூடிய நாளாகவே இறைவன் ஆக்கி வைத்திருக்கிறான். எனவே இந்த நாளை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மேலும் இந்த நாளில் அதிகமாக திக்ர், ஸலவாத்துக்கள், இஸ்திஹ்பார்களை செய்து கொள்ள வேண்டும்.
மேலும் முடிந்தவரை ஒவ்வொரு ஆண்களும் இமாம் அவர்கள் மின்பருக்கு ஏறுவதற்கு முன்னால் பள்ளிவாசலுக்குச் செல்ல முயற்சிக்க வேண்டும். மேலும் வழூ செய்து பள்ளிக்குள் நுழைந்த பின் தஹிய்யதுல் மஸ்ஜித் (பள்ளிக்குள் நுழைந்ததற்கான இரண்டு ரக்ஆத் ஸுன்னத் தொழுகை, வுழூவுடைய இரண்டு ரக்ஆத் சுன்னத் தொழுகைகளை நாம் தொழுது கொள்ள வேண்டும்.
எனவே இந்த வெள்ளிக்கிழமை நாளை இறைவனுக்கு பொருத்தமான வழியில் நாங்கள் பயணிக்க அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் கிருபை செய்தருள்வாயாக!.
ஆமீன்...
As-safeenah

