ஜன்னதுல் பக்கி என்ற அடக்கஸ்தளத்திற்கு ஏன் இத்தனை சிறப்புக்கள்?
இந்த உலகில் உள்ள அனைத்துப் படைப்பினங்களுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கிறது. அதுபோன்று அதற்கு ஒரு முடிவும் உள்ளது. இதற்கு மனிதனும் விதிவிலக்கு தான். மனிதனும் ஒரு நாள் இந்த உலகில் பிறந்து மற்றைய ஏதோ ஒரு நாளில் மரணித்தே ஆகவேண்டும்.
ஏதோ ஒரு நாள் மரணித்தே ஆகவேண்டும் என்ற நியதியில் உள்ள மனிதன் மதீனாவில் உள்ள ஜன்னத்துல் பக்கீயில் தமது உடல் அடக்கப் படுவதற்கு பிரார்த்திக்குமாறு ஏக வல்ல நாயனின் தூதர் அருமை நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
ஜன்னத்துல் பக்கீ என்றால் மதினாவில் உள்ள மஸ்ஜிதுன் நபவியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் இஸ்லாமியர்களின் அடக்கஸ்தலம் ஆகும். இவ் அடக்கஸ்தலத்தில் மதீனாவின் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் யாரெல்லாம் மரணிக்கிறார்களே அவர்களை அடக்கப்படும்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் ஏனைய அடக்கஸ்தலங்களை விட இந்த இடத்திற்கு ஒரு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அவைகளை நிறைய ஹதீஸ் தொகுப்புகளில் நாம் காணலாம்.
ஸையிதுனா ரஸூலுல்லாஹி ﷺ அவர்கள் கூறினார்கள்:- "யாருக்காவது மதீனாவில் மரணிக்க விரும்பினால் அவர் மதீனாவில் மரணிப்பதற்காக தயார் ஆகட்டும். அவ்வாறு மரணித்தால் நாளை மறுமைநாளில் அவருக்கு சாட்சியாகவும், பரிந்துரை (ஷபாஆத்) செய்பவராகவும் நான் இருப்பேன்" என்றார்கள்.
ஸஹீஹ் புகாரியிலே பதிக்கப்பட்டிருக்கிறது ஸையிதுனா உமர் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறினார்கள்:-
"اللهم ارزقني شهادة في سبيلك، واجعل موتي في بلد رسولك"
யா அல்லாஹ் உன்னுடைய மார்க்கத்தில் என்னை ஷஹீது ஆக்குவாயாக, உன்னுடைய ரசூல் உடைய நாட்டிலே என்னை மரணிக்க செய்வாயாக என இப்படி துஆ செய்பவர்களாக இருந்தார்கள்.
ஸையிதுனா மாலிக் ரழியல்லாஹ் அன்ஹு நாயகம் அவர்கள் மதீனாவை விட்டு வெளியேரிச் சென்றதே இல்லை. வாழ்நாளில் ஒரு தடவைதான் ஹஜ்ஜூம் செய்திருக்கிறார்கள். மற்ற வாழ்நாள் முழுவதும் மதீனாவில் கழித்தார்கள். மதீனாவை விட்டு வெளியில் சென்றால் தன்னை மரணம் அங்கு வந்து அடைந்து விட்டால் மதீனாவில் என்னை அடக்கம் செய்யமுடியாமல் போய்விடுமே! என்று ஐயம் கொண்டு அவர்கள் மதீனாவிலே இருந்தார்கள்.
இவர்களை போன்று பெரும் பெரும் இமாம்கள் எல்லாம் சொல்கிறார்கள். ஈமானுடன் முஃமீனாக, அஹ்லுஸ் சுன்னத்தில் இருந்து மதீனாவில் மரணித்து அங்கேயே அடக்கம் செய்யப்படுபவர்களுக்கு கபுரின் வேதனைகள் இருக்காது என்று பெரும் இமாம்கள் கூறியிருக்கிறார்கள்.
யா அல்லாஹ் உன்னுடைய மார்க்கத்தில் எங்களை ஷஹீது ஆக்குவாயாக, யா அல்லாஹ் உன்னுடைய ரசூல் நாட்டிலே எங்களை மரணிக்கச் செய்வாயாக, யா அல்லாஹ் எங்களின் உடலை ஜன்னத்துல் பக்கியில் அடக்க செய்வாயாக
யா அல்லாஹ் ஆமீன்...