1400 ஆண்டுகளுக்கு முன்பு கைவிரல் நுனி அதாவது கைவிரல் ரேகை வடிவமைப்பை வைத்துதான் மனிதனை அடையாளம் காண முடிந்தது. இந்த விரல் நுனியை ஆதம் (...
1400 ஆண்டுகளுக்கு முன்பு கைவிரல் நுனி அதாவது கைவிரல் ரேகை வடிவமைப்பை வைத்துதான் மனிதனை அடையாளம் காண முடிந்தது. இந்த விரல் நுனியை ஆதம் (அலை) அவர்கள் தொட்டு இந்த இருபதாம் நூற்றாண்டிலும் இனிவரும் இறுதி நாள் வரையிலும் அனைத்து மனிதர்களுக்கும் தனித்துவ அடையாளமாக அல்லாஹ் ஆக்கி வைத்துள்ளான்.
பொதுவாக மனிதனின் கைகளிலும், விரல்களிலும் ரேகைகள் உள்ளன. விரல் ரேகையே தடைய அறிவியலுக்கும் மற்றும் அனைத்துத் துறைகளுக்கும் பயன்படுகின்றன.
நபி ﷺ அவர்கள் மக்காவில் இஸ்லாத்தை போதித்துக் கொண்டிருக்கும் போது, மரணத்திற்குப் பின் எழுப்பி அவனது சுவர்க்க, நரக வாழ்க்கை விடயங்களைப் பற்றி விளக்கினார்கள். அப்பொழுது ஒரு மனிதர் இறந்து மக்கிப்போன ஒரு மனிதனின் எலும்பை கையில் எடுத்து அதைத் தூளாக நொறுக்கி கீழே போட்டபின் இந்த எலும்புக்கும் அல்லாஹ் உயிர் கொடுப்பானா? என்று அந்த மனிதர் கேட்டார்.
அல்லாஹ் அப்பொழுதுதான் இந்த வசனத்தை இறக்கி வைத்தான். "மக்கிப்போன மனிதனின் எலும்பை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணிக் கொண்டிருக்கிறான். அப்படியல்ல அவன் நுனி விரல்களையும் (அதாவது விரல் ரேகைகலையும்) முன்பு இருந்தவாரே வடிவமைக்கும் ஆற்றலை அல்லாஹ் பெற்றுள்ளான் என்பதை நபியே! நீங்கள் அவர்களுக்குச் சொல்லுங்கள்."
(அல்குர்ஆன்:-75 - 3/4)
மனித உடலில் பல உறுப்புகள் இருந்தாலும் இந்த வசனத்தில் அல்லாஹ் விரல் நுனியைக் கூட முன்பு இருந்தவாறு படைக்க ஆற்றல் உடையவன் என்று கூறியதன் மூலம் விரலும் அந்த விரலின் நுனியில் உள்ள ரேகைகளும் அப்படியே உருவாக்கப்படும் என்பதாக அல்லாஹ் சொல்கிறான்.
உலக அழிவுக்குப் பின்னால் இறுதித் தீர்ப்பு நாளில் அனைத்து ஜீவராசிகளுக்கும் முன்பு இருந்தது போலவே தனித்தனி அடையாளத்துடன் மீண்டும் உயிர்ப்பிப்பது என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரிய தனி ஆற்றல், வல்லமை ஆகும்.
விரல்நுனி ரேகையைப் பற்றிய நவீன அறிவியல்......
விரல்நுனி ரேகையைப் பற்றிய நவீன அறிவியலானது இன்று உலகில் 600 கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின் கைவிரல் ரேகை ஒரு மனிதனுக்கு உள்ளது போல் மற்றொரு மனிதருக்கு இருக்காது. ஒட்டுமொத்த மனிதர்களின் ஒவ்வொருவரினது கைரேகையைப் போன்று அடுத்த மனிதர்களின் கைவிரல் ரேகை இருக்க வாய்ப்பே இல்லை.
எனவேதான் அல்லாஹ் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனி பிரத்தியேகமான அடையாளத்தைக் கொடுத்துள்ளான். நமது தோற்றம் நாளாக நாளாக மாறக்கூடியது. நமது உடல் உறுப்புகள், முக அடையாளங்கள் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இரண்டு வயது குழந்தையின் விரல் ரேகை அந்தக் குழந்தை வயதாக, முதியவராக மாறிய பின்பும் அதே ரேகை தான் இருக்கும். விரல் ரேகையின் அமைப்பு கொஞ்சம் கூட மாருவதில்லை.
எனவேதான் தடைய அறிவியல்த் துறை, விரல் ரேகை நிபுணர்கள் இந்த கைவிரல் ரேகையை 'கடவுள் கொடுத்த முத்திரை' என்று கூறுவார்கள். இது அல்லாஹ் தனது அடியானுக்கு வைத்த முத்திரை.
சுப்ஹானல்லாஹ். அல்லாஹ்வே படைப்பாளன். அவனே அனைத்திலும் ஆற்றல் மிக்கவன்.