மனிதனின் உறுப்புகளில் முக்கியமானது ஒன்று தான் அவனது முகம். இந்த முகத்தை வைத்துத்தான் நாம் ஒருவரை அடையாளம் காண்கிறோம். ஒருவருடைய அழகு, க...
மனிதனின் உறுப்புகளில் முக்கியமானது ஒன்று தான் அவனது முகம். இந்த முகத்தை வைத்துத்தான் நாம் ஒருவரை அடையாளம் காண்கிறோம். ஒருவருடைய அழகு, கம்பீரம், இளமை, முதுமை, சிரிப்பு, கோபம், அழுகை போன்ற பல உணர்ச்சிகளையும், அடையாளங்களையும் ஒரு மனிதனுடைய முகத்தைப் பார்த்தே நாம் தீர்மானிக்கிறோம். எனவே இந்த முகத்தை நாம் அழகாக, இளமையாக வைப்பதற்கு நம்மில் பலர் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு நிறையவே செலவும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நமது வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறுபட்ட உபதேசங்களை சொல்லித் தந்திருக்கிறார்கள். அதேபோன்று இவ்வுலகில் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கும் பல மருத்துவத்தையும் காட்டித் தந்துள்ளார்கள். அவைகளில் ஒன்றாக நமது முகத்தை அழகாக, இளமையாக வைத்திருப்பதற்கும் பல வழிமுறைகளை காட்டித் தந்துள்ளார்கள்.
உம்மு சலமா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; உம்மு சலமா (ரழி) அவர்களின் கணவர் அபூ ஸலமா (ரழி) அவர்கள் மரணித்த பொழுது நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அவர்களுடைய கண்களில் கற்றாலையை பூசிக் கொண்டு வருகிறார்கள். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உங்களுடைய கண்களில் பூசி இருக்கக்கூடியது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சலமா அவர்கள் இது கற்றாழை. இதில் எந்த நறுமணமும் கிடையாது. இதை நான் என்னுடைய கண்களில் பூசி உள்ளேன் என்று கூறினார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அந்த நேரத்தில் ஒரு தகவலை அறிவித்தார்கள். "காற்றாலையானது முகத்தை இளமையாக்கும்" என்று கூறினார்கள்.
(நஸஈ:- 3,481) , (அபூ தாவூத்:- 2,307)
இந்த ஹதீஸ் ஒரு பெண்மணி கணவனை இழந்து இத்தாவில் இருக்கக்கூடிய ஒரு செய்தியை சொல்லிக் காட்டினாலும், இதில் அவர்களது கண்களில் பூசி இருக்கக்கூடிய அந்த கற்றாளைப் பற்றிய ஒரு மருத்துவக் குறிப்பை நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.
இன்றைக்கும் மருத்துவரீதியாக இந்தக் கற்றாழை பல்வேறுபட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக முக அழகு சாதனங்களுக்கு இக் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது.
இன்றைக்கு இக் கற்றாழையானு அனைத்து முக அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அன்றைக்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கற்றுத் தந்தைதான் இன்று நவீன மருத்துவமும் கையாளுகின்றன.
எனவே நமது ஊர்களில், வீடுகளில் காணப்படும் இயற்கையான இக் கற்றாழையை பயன்படுத்தி நமது முக அழகை மேம்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும். மாறாக நவீன முக அழகு சாதனங்களை பயன்படுத்தி எமது தோலையும், சருமத்தையும் சீரலிக்காமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.