இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுடைய உதவியை ஏதோ ஒரு வகையில் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த உலகத்தில...
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதனும் பிற மனிதனுடைய உதவியை ஏதோ ஒரு வகையில் எதிர் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த உலகத்தில் யாருடைய உதவி எம்மை வந்து அடைந்தால் வேறு எந்தவொரு மனிதனுடைய உதவியும் தேவைப்படாதோ அத்தகைய உதவியாளன், அகிலத்தின் இரட்சகன் அல்லாஹுத்தஆலா உடைய உதவியைப் பெற்றுக்கொள்ள அருமை நாயகம் ﷺ அவர்கள் அருமையான வழியைக் காட்டித் தந்துள்ளார்கள்.
அந்த வகையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்ன அந்தச் செயலை செய்வதன் மூலம் அல்லாஹ் இந்த அடியானுக்கு உதவி செய்வதில் நாட்டம் கொள்கிறான். எனவே அது எந்தச் செயல், என்ன உதவி என்பதை நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "ஒரு நம்பிக்கைக் கொண்டவர் மற்றொரு நம்பிக்கைக் கொண்டவரின் சகோதரர் ஆவார். அவருக்கு அநீதி இழைக்கவும் மாட்டார். அவரை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டார். தன் சகோதரரின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒருவரை ஒரு துன்பத்திலிருந்து நீக்குகிறவனை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளில் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவனின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் அவனது குறைகளை மறைக்கிறான்."
(ஆதாரம்:- புஹாரி - 2442)
ஆக அருமைச் சகோதரர்களே!. அடுத்தவர்களுடைய துன்பங்களை நீக்குவதில் நாங்கள் ஈடுபட வேண்டும். அவர்கள் அத்துன்பத்திலிருந்து மீண்டுவர எம்மால் என்ன உதவிக் கரங்களை நீட்ட முடியுமோ அந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும். அப்படி முடியாவிட்டாலும் நல்ல வார்த்தைகள் மூலமாக அவர்களுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்.
எனவே இப்படி பிற மனிதர்களுக்கு எம்மால் முடிந்த அளவு நாம் உதவுவதன் மூலம் எல்லாம் வல்ல இறைவனின் உதவி எம்மை வந்தடையும்.
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!