தொழுகையில் எமக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அதேபோன்று மறுமை நாளிலே தொழுகையைக் குறித்துத்தான் முதற் கேள்வியாக அல்லாஹுத்தஆலா எம்மிடத்...
தொழுகையில் எமக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அதேபோன்று மறுமை நாளிலே தொழுகையைக் குறித்துத்தான் முதற் கேள்வியாக அல்லாஹுத்தஆலா எம்மிடத்திலே கேள்வி எழுப்புவான்.
இந்தத் தொழுகைதான் எங்களுடைய பாவங்களை அல்லாஹுத்தஆலா மன்னிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்குகின்றது. எனவே இதுகுறித்து நிறைய சான்றுகள் உள்ளன.
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் தொழுது கொண்டிருந்த ஒரு இளைஞரைப் பார்த்தார்கள். அந்த இளைஞர் தன்னுடைய தொழுகையின் நிலையை நீட்டி அதிலேயே நீண்ட நேரம் நின்றார். இதைப் பார்த்த இப்னு உமர் (ரழி) அவர்கள் அந்த இளைஞர் குறித்து "இவரை யாருக்குத் தெரியும்" எனக் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் "எனக்கு இவரைத் தெரியும்" என்று கூறினார். பின்பு அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்; "அவர் எனக்குத் தெரிந்தவராக இருந்திருந்தால் அவர் ருகூவையும், சுஜூதையும் நீட்டித் தொழுமாறு நான் ஏவி இருப்பேன். ஏனென்றால்...;
அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் ﷺ அவர்கள் "ஒரு அடியான் தொழுகின்றவனாக நிற்கும் பொழுது அவனுடைய பாவங்கள் கொண்டுவரப்பட்டு அவனது தலையின் மீது அல்லது அவனது தோள் புஜத்தின் மீது வைக்கப்படுகின்றன. அவன் ஒவ்வொரு தடவை ருகூ, ஸுஜூது செய்யும் பொழுதும் அவனிடமிருந்து அந்தப் பாவங்கள் உதிர்ந்து விழுந்துவிடுகின்றன" என்று கூறினார்கள்."
ஆதாரம்:- இப்னு ஹிப்பான்-1,734 / பாகம்-05 / பக்கம் - 26)
எனவே எமது தொழுகையில் ஸுஜூதிற்கும், ருகூவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எங்களுடைய பாவங்கள் அனைத்தையும் போக்கிக் கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.
ஆகவே எங்களுடைய தொழுகைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!. மேலும் எங்களுடைய அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித் தருள்வானாக.!
ஆகவே எங்களுடைய தொழுகைகளை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!. மேலும் எங்களுடைய அனைத்துப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித் தருள்வானாக.!
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
As-safeenah

