இந்த உலகத்தில் மனிதனுக்கு மாத்திரம் இன்றி உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் வழங்கி அல்லாஹ் வழங்கியிருக்கின்ற மிகப்பெரும் பொ...
இந்த உலகத்தில் மனிதனுக்கு மாத்திரம் இன்றி உலகத்தில் வாழக்கூடிய ஒவ்வொரு உயிரினத்திற்கும் வழங்கி அல்லாஹ் வழங்கியிருக்கின்ற மிகப்பெரும் பொக்கிஷம் தான் இரண்டு கண்கள்.
இந்த இரண்டு கண்கள் இல்லாத அல்லது கண் பார்வையற்ற மனிதர்களும் ஏனைய உயிரினங்களும் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் கண்ணால் பார்த்து ஒரு வேலையை நேர்த்தியாக செய்வது போன்று பார்வையற்றவரின் வேலை இருக்காது. ஆகவே கண்பார்வை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் ஒவ்வொருவரும் நிச்சயம் உணர்ந்திருக்கின்றோம்.
ஆக இறைவனால் எமக்கு அருளப்பட்ட மிகப் பெரும் பொக்கிஷமான இரண்டு கண்களையும் பாதுகாக்கும் முறையையும், அதனை சீராக வைத்திருக்கவும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சில வழிமுறைகளைக் காட்டித் தந்துள்ளார்கள். அவைகளை நபிமொழித் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
🔷️ கண்பார்வை அதிகரிப்பதற்கு...
ஸஅத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறக் கேட்டேன். "நீங்கள் உறங்கச் செல்வதற்கு முன் சுர்மாவை (கண்களுக்கு) இட்டுக் கொள்ளுங்கள். அது கண்பார்வையை அதிகரிக்கும். (மேலும் அது) கண் இமைகளை வளரச் செய்யும்".
(ஆதாரம்:- இப்னுமாஜா - 3496)
🔷️ சுர்மா ஒற்றை எண்ணிக்கையில் இடப்பட வேண்டும்.
அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "சுர்மா இடுபவர்கள் அதனை ஒற்றை எண்ணிக்கையில் இட்டுக் கொள்ளட்டும். எவர் அப்படிச் செய்தாரோ அவர் நல்லதைச் செய்து விட்டார். எவர் அப்படிச் செய்யவில்லையோ அதில் தவறு ஒன்றும் இல்லை.
எனவே இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட இந்த மாபெரும் அருட்கொடையான இரு கண்களுக்கும் ஒற்றைப்படையில் சுர்மா இடுவதன் மூலம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று அருமை நாயகம் ﷺ அவர்கள் சொல்லிக் காட்டினார்கள். இதனடிப்படையில் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த மாபெரும் அருட்கொடையை முறையாக பயன்படுத்திக் கொள்வோமாக...