இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனாலும் அவனுடைய தூதர்களாலும் அறவே வெருக்கப்பட்ட மற்றும் அசிங்கமாகப் பார்க்கப்பட்ட பாவங்களில் ஒன்று தான் பொய் ...
இஸ்லாமிய மார்க்கத்தில் இறைவனாலும் அவனுடைய தூதர்களாலும் அறவே வெருக்கப்பட்ட மற்றும் அசிங்கமாகப் பார்க்கப்பட்ட பாவங்களில் ஒன்று தான் பொய் கூறுவதாகவும்.
மேலும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூட இந்தப் பொய் பேசுகின்ற மனிதர்கள் குறித்து ஒருவர் மற்றொருவருக்கிடையில் பொய் பேசிக் கொள்பவர் நாளை மறுமையில் அவருடைய தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்வார் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.
என்றாலும் பண்பும், பணிவும் ஒழுக்கமும், இரக்க குணமும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கின்ற மனப்பாங்கையும் வலியுறுத்தும் பனித இஸ்லாம் மார்க்கம் சில நேரங்களில் பொய் சொல்வதற்கும் அனுமதித்துள்ளது.
இப்படி பொய் சொல்வதை ஒரு சில நேரங்களில் மாத்திரமே தவிர ஏனைய நேரங்களில் முற்றுமுழுதாகப் பொய்யை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆக அந்தப் பொய்க் கூறுவதை அனுமதித்த நேரங்கள் என்னென்ன என்பதை இப்பொழுது ஹதீஸ் தொகுப்பின் மூலமாக ஆராயலாம்.
உம்மு குல்ஸூம் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; "மனிதர்களுக்கு மத்தியில் சமாதானத்தை ஏற்படுத்தி வைக்க; நல்லதை எடுத்துச் சொல்லியோ, அல்லது நல்லதை கூறுபவர் பொய்யர் அல்லர்" என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்.அதாவது இரு மனிதர்களுக்கிடையிலோ அல்லது ஒரு கூட்டத்திற்கு மத்தியிலோ குழப்பங்கள் ஏற்படுகின்ற பொழுது அவர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு பொய்யான செய்தியைக் கூற முடியும். இவ்வாறு பொய் கூறுவதற்கு எந்தத் இஸ்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அதேபோன்று அவ்வாறு பொய் சொல்பவர்கள் பொய்யர்கள் என்றும் கருதப்பட மாட்டார்.
(புஹாரி:- 2692 / முஸ்லிம்:- 2605)
மேலும் முஸ்லிம் என்கின்ற ஹதீஸ் கிரந்தத்தில் மற்றுமொரு அறிவிப்பில் பின்வருமாறு சில விடயங்கள் கூடுதலாக உள்ளது.
அதாவது "மனிதர்கள் பேசக்கூடியவற்றில் மூன்று விடயங்களில் மாத்திரம் தான் பொய் பேச அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தவிர அவர்களிடம் வேறு எதுவும் கேட்டதில்லை"
01) போர்க்களத்தில் தன்னை காபிர்களிம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக வேண்டியும்,எனவே புனித இஸ்லாமிய மார்க்கம் இந்த மூன்று சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்து நேரத்திலும் பொய்யை கடுமையாக எச்சரிக்கின்றது. எந்த அளவுக்கு என்றால் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் "கசப்பாயினும் உண்மையை மாத்திரமே பேசு" என்று சொல்லிக் காட்டினார்கள்.
02) மனிதர்களுக்கிடையே சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டியும்,
03) ஒருவன் தன் மனைவியை சந்தோஷப் படுத்துவதற்காக வேண்டியும், ஒரு பெண் தனது கணவனை சந்தோசப் படுத்துவதற்காக வேண்டியும் பொய் சொல்லலாம்.
ஆகவே எமது வாழ்க்கையில் முற்றுமுழுதாக பொய்களை தவிர்த்தும், அவசியம் ஏற்பட்டால் இந்த மூன்று தருணத்தில் மாத்திரம் இச் சலுகையை பயன்படுத்திக் கொள்வோம். அதேபோல் எமது வாழ்க்கையை இறைவனுக்குப் பொருத்தமானதாக ஆக்கிக் கொள்வதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அத்தனை பேருக்கும் அருள் பாலிப்பானாக....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!