அலட்சியமாக யார் மூன்று ஜும்ஆக்களை விடுகின்றார்களோ அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹுத்தஆலா முத்திரையிட்டு விடுகிறான் என்று நபிகள் நாயகம் ﷺ அ...
அலட்சியமாக யார் மூன்று ஜும்ஆக்களை விடுகின்றார்களோ அவர்களுடைய உள்ளத்தில் அல்லாஹுத்தஆலா முத்திரையிட்டு விடுகிறான் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள். மேலும் தக்க காரணங்கள் இன்றி யார் மூன்று ஜும்ஆக்களை கை விடுகின்றார்களோ அவர் நயவஞ்சகர்களின் பட்டியலில் எழுதப் படுவார் என்றும் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்.
இந்த நேரத்தில் முஸ்லீம்களாகிய எமக்கு ஓர் அச்சம் ஏற்படுகின்றது. ஜும்ஆ உடைய தொழுகையை நாம் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் விட்டுவிட்டாள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொன்னார்கள் அல்லவா! அல்லாஹ் அவர்களுடைய உள்ளத்தில் முத்திரையிட்டு விடுகிறான் என்றும், நயவஞ்சகர்களின் பட்டியலில் சேர்த்து விடுகின்றான் என்றும். எனவே அது எமக்கும் நடந்துவிடுமோ என்று இறையச்சம் உள்ள ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே ஓர் அச்சம் ஏற்படுவதுண்டு.
ஆக அன்பார்ந்த அல்லாஹ்வின் நல்லடியார்களே!...
இங்கே அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சொல்லக்கூடிய மூன்று ஜும்ஆக்களை விடக்கூடியவர்கள் அலட்சியமாக, தக்க காரணங்கள் இன்றி யார் விடுகின்றார்களே அவர்களைத்தான் இங்கே சொல்கின்றார்கள்.
ஜும்மாவுடைய தினத்தில் அலட்சியமாக, பொடுபோக்காக, சோம்பேறித்தனமாக இருக்கக்கூடிய நபர்களுக்குத்தான் நபிகள் நாயகம் சொல்லக்கூடிய இந்த ஹதீஸ்.
ஆனால் இந்த காலகட்டத்தில் ஓர் இக்கட்டான நிலையிலும், தக்க காரணத்தோடும்தான் நாம் வீட்டில் இருந்து கொண்டிருக்கின்றோம்.
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உங்களுடைய ஊரிலே கொள்ளை நோய் இருந்தால் அடுத்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள். அதேபோன்று வேறொரு ஊரில் கொள்ளை நோய் இருந்தால் அந்த ஊருக்கு நீங்கள் செல்லாதீர்கள் என்று சொன்றார்கள்.
எனவே இப்படிப்பட்ட ஓர் மார்க்கத்தை தேர்ந்தெடுத்த நாம் இந்த விடயத்தில் நிச்சயமாக கவலைக் கொள்ள எந்தவொரு அவசியமும் இல்லை. கருணையாளருக் கெள்ளாம் கருணையாளன் அல்லாஹ்.
மேலும் இப்படிப்பட்ட இக்கட்டான காலங்களில் ஜும்மா உடைய நேரத்தில் வீட்டில் இருந்துகொண்டு லுஹர் தொழுகையை தொழுது கொள்ள முடியும். இதுதான் ஏகோபித்த உலமாக்களின் கருத்தாகும்.
எனவே நாம் எமது வீடுகளில் இருந்து கொண்டு எமக்குக் கடமையாக்கப்பட்ட ஐந்து நேரத் தொழுகைகளை சரிவரத் தொழுது கொண்டும், மேலும் ஏனைய நஃபிலான, சுன்னத்தான தொழுகைகளை தொழுது கொண்டும், புனித அல் குர்ஆனை ஓதிக் கொண்டும் இறைவனைத் துதிப்போமாக!
மேலும் வீடுகளில் இருந்து கொண்டு வீண் களியாட்டங்கள், வீண் பொழுது போக்குகள் போன்ற பாவமான காரியங்களிலிருந்து விலகி நடந்துகொள்வோமாக.
இறைவனால் எமக்கு வழங்கப்பட்ட இந்த ஓய்வான நேரத்தை பொடு போக்காக வீணடித்து விடாமல் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அதேபோன்று ஜும்மா உடைய நாளில் துஆக்கள் அங்கீகரிக்கப்படும் ஓர் நேரம் உண்டு. ஆக ஜும்மா உடைய இந்த நாளில் அல்லாஹ்விடத்தில் உலகத்தில் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் அசம்பாவிதங்கள் அனைத்தும் சரியாவதற்கு அதிக அதிகமாக துஆப் பிரார்த்தனை செய்து கொள்வோமாக!
அல்லாஹ் நம் அத்தனை பேர்களுடைய சாலிஹான நல்ல துஆக்கள் அனைத்தையும் கபூல் செய்து கொள்வானாக...
அமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
As-safeenah

