நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சில மனிதர்களைப் பார்த்து அவர்கள் நாய்க்கு ஒப்பானவர்கள் என்று சொல்லிக் காட்டினார்கள். எனவே நபிகள் நாயகம் ﷺ அவ...
எனவே நபிகள் நாயகம் ﷺ அவர்கள் யாரை நாய்க்கு ஒப்பாக்கினார்கள், மேலும் ஏன் அவர்களை ஒப்பாக்கினார்கள் என்பதைக் குறித்து இந்த ஹதீஸின் மூலம் ஆராய இருக்கின்றோம்.
உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நான் ஒருவரை அல்லாஹ்வின் பாதையில் (பயணம் மேற்கொள்வதற்காக) உயர் ரகக் குதிரையொன்றில் (அவருக்கே அதைத் தானமாகக் கொடுத்து) அனுப்பிவைத்தேன். அந்தக் குதிரைக்காரர் அதை (சரியாகப் பராமரிக்காமல்) பாழாக்கிவிட்டார். அவர் அதை மலிவான விலைக்குக் (கேட்டால் கூட) விற்று விடுவார் என்று நான் எண்ணினேன். ஆகவே அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்களிடம் அது குறித்துக் கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் நபிகள் நாயகம் ﷺ அவர்கள், "அதை விலைக்கு வாங்காதீர்கள். உங்கள் தானத்தைத் திரும்பப் பெறாதீர்கள். தனது தானத்தைத் திரும்பப் பெறுபவன் நாய்க்கு நிகரானவன் ஆவான்." என்று நபிகள் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறிக் காட்டினார்கள்.எனவே யார் ஒருவர் மற்றுமோர் மனிதனுக்கு ஒரு பொருளைத் தானமாகக் கொடுத்து விட்டு, மீண்டும் அதை திரும்பப் பெற்றுக் கொள்பவர் நாய்க்கு ஒப்பானவர் என்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
(முஸ்லிம்:- 3,313)
ஆகவே இன்றைய காலகட்டத்தில் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் ஒவ்வொரு மனிதரும் தன்னுடைய அன்றாட உணவுக்குக் கூட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிக் கரங்களை நீட்டுவோம். அதற்கான பிரதிபலிப்புகளை எமது இரட்சகன் அல்லாஹுத்தஆலாவிடம் மாத்திரமே எதிர்பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் எங்களுடைய தான, தர்மங்களை அல்லாஹ் கபூல் செய்து கொள்வானாக.....
மேலும் எங்களுடைய தான, தர்மங்களுக்குப் பிரதிபலிப்பாக அந்த மறுமை நாளில் அவனுடைய ரஹ்மத்தை எங்கள் மீது சொரிந்தருள்வானாக.....
ஆமீன்...! ஆமீன்...! யாரப்பல் ஆலமீன்...!
COMMENTS