நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகத்தில் அவர்கள் வாழ்ந்த காலங்கள் அனைத்தும் எமக்கு ஓர் படிப்பினையாகும், எமது வாழ்க்கைக்கு ஓர் முக்கிய எடுத்...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இந்த உலகத்தில் அவர்கள் வாழ்ந்த காலங்கள் அனைத்தும் எமக்கு ஓர் படிப்பினையாகும், எமது வாழ்க்கைக்கு ஓர் முக்கிய எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றது.
இதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் தன்னுடைய சுபஹ் தொழுகைக்குப் பின்னால் என்னென்ன காரியங்களைச் செய்தார்கள் என்பதை எல்லாம் ஹதீஸ் தொகுப்பிலிருந்து ஆராயலாம்.
ஜாஃபிர் பின் ஸமூரா (ரழி) அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சுபஹ் தொழுது முடித்ததும் சூரியன் நன்கு உதயமாகும் வரை தொழுத அதே இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள்.இந்த ஹதீஸைப் பொறுத்தவரையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் சுபஹ் தொழுகையை முடித்துக்கொண்டு அதே இடத்தில் அமர்ந்து சூரியன் உதயமாகும் வரை திக்ர், தஸ்பீஃ, இஸ்திஃபார், ஸலவாத் போன்ற அமற்களில் ஈடுபட்டிருப்பார்கள் என்பதாக இந்த ஹதீஸை அறிவித்தவர் சுட்டிக் காட்டுகின்றார்கள்.
(முஸ்லிம்:- 1,189)
எனவே தற்போதைய இக்காலகட்டத்தில் நாங்கள் அனைவரும் எமது வீடுகளிலேயே இருந்து கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்த காலகட்டத்தையாவது சரியான முறையில் பயன்படுத்தி இந்த ரமலானிலாவது சுபஹ் தொழுகைக்குப் பின்னால் நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய சுன்னத்தை ஹயாத்தாக்குவோமாக...
இன்ஷா அல்லாஹ்...!
COMMENTS