நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அவர்களுடைய உம்மத்தாகிய எங்களுக்கு ஏராளமான துஆக்களைக் கற்றுத்தந்துள்றார்கள். அதிலும் மிக முக்கியமான இஸ்லாத்தில் இர...
நபிகள் நாயகம் ﷺ அவர்கள் அவர்களுடைய உம்மத்தாகிய எங்களுக்கு ஏராளமான துஆக்களைக் கற்றுத்தந்துள்றார்கள். அதிலும் மிக முக்கியமான இஸ்லாத்தில் இரண்டாவது கடமையான தொழுகையை நிறைவேற்றும் பொழுது அதில் ஓதக்கூடிய ஏராளமான, விசேஷமான சில துஆக்களை எமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
அதனடிப்படையில் நபிகள் நாயகம் ﷺ அவர்கள் நாம் எமது தொழுகையை முடித்தவுடன் இந்த துஆவை கேட்பதை விட்டு விடாதீர்கள் என்று எமக்கு அழுத்தத்தோடு கூறிய ஒரு துஆவைப் பற்றி இப்பொழுது நாம் ஹதீஸ் தொகுப்பில் இருந்து ஆராய்வோம்.
முஆத் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே."ஆகவே இந்த துஆவினை நாம் எங்களுடைய ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் அதிகமதிகமாக கேட்டுக் கொள்ள வேண்டும். அதே போன்று எங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்காகவும் நாம் துஆக்களைக் கேட்டுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் போது தான் எம்மில் அல்லாஹ் கூறிய அமற்களை எல்லாம் சிறப்பான முறையில் செய்வதற்கு எமக்கு வாய்ப்புகள் கிட்டுகின்றன.
(அபூதாவூத்:- 1,301 // அஹமத்:- 21,109)
ஆகவே எமக்காகவும், எம்மைச் சார்ந்த அனைவருக்காகவும் நாம் அல்லாஹ்விடத்தில் ஆரோக்கியத்திற்காக துஆக்களைச் செய்வோமாக...
இன்ஷா அல்லாஹ்...!