அல்லாஹ்வால் தன்னுடைய அடியார்களுக்கு நிறைய மருந்துகள் அருளப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அல்லாஹ்வால் மனிதனுக்கு அருளப்பட்ட மருந்துகளில் மிக மு...
அல்லாஹ்வால் தன்னுடைய அடியார்களுக்கு நிறைய மருந்துகள் அருளப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அல்லாஹ்வால் மனிதனுக்கு அருளப்பட்ட மருந்துகளில் மிக முக்கிய இடத்தில் இஞ்சியும் உள்ளது. மேலும் அல்லாஹுத்தஆலா அல்-குர்ஆனிலே சுவர்க்க வாசிகளுடை விஷயத்தில் இஞ்சியை சிறப்பித்தும் கூறுகின்றான்.
அதாவது அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே சுவர்க்க வாசிகளுக்குக் கொடுக்கக்கூடிய பானங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு வருகின்ற பொழது பின்வருமாறு கூறுகின்றான்:-
மேலும் அ(ச்சுவர்க்கத்)தில் ஸன்ஜபீல் (எனும் இஞ்சி) கலந்த ஒரு கிண்ண(த்தில் பான)ம் புகட்டப்படுவார்கள்.இவ்வசனத்தில் சுவர்க்கவாசிகளுக்கு இஞ்சி கலந்த ஒரு கிண்ணத்தில் பாணம் புகட்டப்படும் என்பதில் இஞ்சி கலந்த என்ற வார்த்தைக்கு ஆழமான கருத்துக்கள் புதைந்திருக்கின்றன. அதாவது இஞ்சியின் மூலம் ஏராளமான மருவத்தை மனித குலத்திற்கு அல்லாஹுத்தஆலா வைத்திருக்கின்றான் என்பதாகும்.
(அல்-குர்ஆன்:- 76:17)
இதற்கு முன்னைய காலத்திலும் சரி, தற்காலத்திலும் சரி எமது சமையலறையின் நண்பனாக இருக்கக்கூடிய இந்த இஞ்சியில் எத்தனையோ விதமான நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கிறான். அவை என்னென்ன என்பதை இப்பொழுது நாம் வரிசையாகப் பார்ப்போம்.
இஞ்சியின் மருத்துவக் குணங்கள்...
01] எமது உடலில் செரிமான மண்டலத்தில் உணவுப் பொருட்கள் தேங்கி நிற்காத படி சிறந்த செரிமானத்திற்கு இஞ்சி உதவுகின்றது.
02] படபடப்பு, இதயக்கோளாறு, இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் நல்லதோர் மருந்தாகவும் இஞ்சி உள்ளது.
03] உடல் எடையைக் குறைக்கவும், இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும் இஞ்சிப் பானம் உதவுகின்றது.
04] இஞ்சிச் சாறு நமது உடலில் மெடபாலிசத்தின் அளவைக் கூட்டுகிறது.
05] பித்தம், புளித்த ஏப்பம் ஆகிய பிரச்சினை உள்ளவர்களுக்கு இஞ்சி நல்லோதர் மருந்தாகும்.
06] உடலிலுள்ள வாயுத் தொல்லைகளுக் இஞ்சி நல்ல மருந்தாகும்.
இத்தனை மருத்துவத் தன்மையையும் கொண்ட இந்த இஞ்சியை தினமும் 3 முதல் 8 கிராம் வரை மட்டுமே எமது உணவில் பயன்படுத்த வேண்டும். எந்த வொன்றும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு இஞ்சியும் ஓர் சிறந்த உதாரணமாகும்.