தொழுகையை தொழ மறந்தால் அதன் பரிகாரம்
ஐந்து நேரத் தொழுகையானது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாக்கப்பட்டக் கட்டாயக் கடமையாகும். இவ்வாறு கட்டாயமாக்கப்பட்ட ஒரு தொழுகையை அதன் குறித்த நேரத்தில் மறந்து விடும் பொழுது அதற்கான குற்றப்பரிகாரம் என்னவென்பதை ஹதீஸ் தொகுப்பில் இருந்து ஆராய்வோம்.
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்; நபிகள் நாயகம் ﷺ அவர்கள் கூறினார்கள்:- "யாரேனும் ஒருவர் ஒரு தொழுகையை(த் தொழ) மறந்துவிட்டால் அதன் நினைவு வந்ததும் அவர் அத் (தொழுகையை) தொழுது கொள்ளட்டும்! இதைத் தவிர அதற்கு வேறு பரிகாரம் ஏதுமில்லை."ஆக ஒரு தொழுகையை மறதியாக அதன் குறித்த நேரத்தில் தவற விடும் பொழுது அதற்கு எந்த ஒரு பரிகாரமும் இல்லை. காரணம் அல்லாஹ் ஒவ்வொரு மனிதனையும் தவறுக்கும், மரதியிற்கும் மத்தியிலேயே படைத்துள்ளான்.
(புஹாரி:- 597)
COMMENTS