ரமழான் இறுதிப் பத்து நாட்களில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள்.
இன்றிலிருந்து நமக்கு ரமழான் பிறை 20 ஆரம்பமாக இருக்கின்றது.
இது இப் புனித மிக்க மாதத்தின் கடைசிப் பத்தின் ஆரம்பமாகும்.
இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் என்னவென்றால்
01) நரக விடுதலையும்,
02) லைலத்துல் கத்ருடைய இரவை எதிர்பார்ப்பதுமாகும்.
மேலும் இந்தக் கடைசிப் பத்து நாட்கள் சம்பந்தமாக ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இமாம் பாயிஸ் ரழிமஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய கிதாபான புஸ்ருல் கரீமில் ஒரு தகவலை கூறுகிறார்கள்:
ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: லைலத்துல் கத்ருடைய இரவை எதிர் பார்க்கக் கூடியவர்கள் புனிதமிக்க ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் வரக்கூடிய ஐந்து வக்துகளில் மஃரிப் மற்றும் இஷாவுடைய இரண்டு வக்துகளை ஜமாஅத்துடன் தொழு வேண்டும் என்று சொன்னார்கள் .
இந்த விஷயத்தை குறித்து இமாம்கள் நமக்கு விளக்கம் அளிக்கும் போது ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:
லைலதுல் கத்ருடைய இரவு ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுகளில் வரக் கூடியதாக இருக்கின்றது என்று சொன்னார்கள்.
ஆனால் சில மஹான்கள் புனிதம் நிறைந்த லைலத்துல் கத்ருடைய இரவு ரமலான் மாதத்தின் பிறை-21" ல் இருக்கலாம் என்றும்,
சிலர்"பிறை- 23" ல் என்றும்,
சிலர் "பிறை- 25" ல் என்றும்,
சிலர் "பிறை-27" ல் என்றும்,
இன்னும் சிலர் "பிறை- 29" ல் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.
இப்படி இமாம்கள் மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் புனிதமிக்க ரமழான் மாதத்தின் கடைசிப் பத்தில் அதுவும் ஒற்றைப்படை இரவுகளில் தான் புனிதம் நிறைந்த இந்த இரவு இருக்கிறது என்பது உறுதியானதாகும்.
அதனால் தான் இமாம்கள் எமக்கு இந்தக் கடைசிப் பத்தில் "மஃரிப் மற்றும் இஷா" உடைய தொழுகைகளை ஜமாஅத்தாகத் தொழவேண்டும் என்று
சொல்லித் தருகிறார்கள்.
ஏனென்றால் ஒரு ஃபர்ழான தொழுகையை ஜமாஅத்தாகத் தொழும் போது அதற்கு 27 மடங்கு நன்மைகள் கிடைக்கின்றன.
அதுவும் புனிதம் நிறைந்த ரமழான் மாதத்தில் தொழுதால் இன்னும் பல மடங்கு நன்மைகள் இருக்கின்றன.
இப்படியாக அவர் தொழும் போது அந்த நாள் புனிதம் நிறைந்த லைலதுல் கத்ருடைய இரவாக ஆகிவிட்டால் "ஸுப்ஹானல்லாஹ்" ஆயிரம் மாதங்கள் தொழுத நன்மைகள் அவருக்குக் கிடைத்து விடும்.
இதனால் தான் ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறிக் காட்டினார்கள்.
எனவே முடிந்தவர்கள் மஃரிப் மற்றும் இஷா உடைய தொழுகைகளை ஜமாஅத்துடன் நிறைவேற்றுங்கள்.
📌 அடுத்தபடியாக :-
பொதுவாக தொழுகைகளை தொழுவதற்கு முன்னால் மிஸ்வாக்செய்வது சுன்னத்தாகும்.
மிஸ்வாக்கை நாம் இரண்டு முறைகளில் செய்யலாம் 1 உளு செய்யும்போது மிஸ்வாக் செய்வது,
இரண்டாவதாக தொழுவதற்கு முன்னால் செய்வது.
இப்படியாக இரண்டு முறைகள் மிஸ்வாக் செய்வதில் இருக்கின்றன.
ஒரு தொழுகைக்கு முன்னால் நாம் மிஸ்வாக் செய்து தொழுதால் அத்தொழுகைக்கு 72 முறை தொழுத நன்மை கிடைக்கிறன.
அதை நாம் புனிதமிக்க ரமழான் மாதத்தில் செய்யும் பொழுது அந்த நன்மை இரட்டிப்பாக நமக்குக் அளிக்கப்படுகிறன.
அதையே நாம் புனிதமிக்க லைலதுல் கத்ருடைய இரவில் செய்யும் போது அந்த நன்மைக்கு அளவே இல்லை...
அதேபோன்று பெண்கள் வீட்டிலேயே ஜமாஅத்தாக தொழுது கொள்ளலாம். சில நேரங்களில் ஆண்களுக்குப் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றால் தனது வீட்டிலேயே குடும்பத்தாருடன் சேர்ந்து ஜமாஅத்தாக தொழுது கொள்ளலாம்.
ஆகவே எல்லாம் வல்ல அல்லாஹ் புனிதமான லைலதுல் கத்ருடைய இரவை கொண்டு வெற்றிபெற்ற கூட்டத்தினராக நம்மை ஆக்குவானாக.

📌 மேலும்
இப் புனித மிக்க திக்ரை அதிகமாக ஓதி வாருங்கள்.
இதற்கு அதிகமான சிறப்புகள் இருக்கின்றன.
இந்த திக்ரானது லைலதுல் கத்ருடைய இரவில் ஓதுவதற்கான விசேடமான திக்ராகும்.
ஒரு முறை ஸய்யிததுனா ஆயிஷா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து : "புனிதம் நிறைந்த லைலதுல் கத்ருடைய இரவில் நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்க !
அதற்கு ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கன்ட திக்ரை கற்றுக் கொடுத்தார்கள்.
எனவே அல்லாஹு தஆலா வின் நல்லடியார்களே புனிதமிக்க லைலதுல் கத்ருடைய இரவை முழுமையாக பயன்படுத்தி அந்த இரவில் அதிகமான நன்மைகளை செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகுவோமாக..!!
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ كَرِيمٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
இப் புனித மிக்க திக்ரை அதிகமாக ஓதி வாருங்கள்.
இதற்கு அதிகமான சிறப்புகள் இருக்கின்றன.
இந்த திக்ரானது லைலதுல் கத்ருடைய இரவில் ஓதுவதற்கான விசேடமான திக்ராகும்.
ஒரு முறை ஸய்யிததுனா ஆயிஷா ரழியல்லாஹு தஆலா அன்ஹா அவர்கள் ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து : "புனிதம் நிறைந்த லைலதுல் கத்ருடைய இரவில் நான் என்ன நன்மை செய்ய வேண்டும்?" என்று கேட்க !
அதற்கு ஸய்யிதுனா தாஹா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கன்ட திக்ரை கற்றுக் கொடுத்தார்கள்.
எனவே அல்லாஹு தஆலா வின் நல்லடியார்களே புனிதமிக்க லைலதுல் கத்ருடைய இரவை முழுமையாக பயன்படுத்தி அந்த இரவில் அதிகமான நன்மைகளை செய்து இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகுவோமாக..!!
ஆமீன்... ஆமீன்... யா ரப்பல் ஆலமீன்...
COMMENTS