ஸ்பெயின் வெற்றி கொள்ளப்பட்டது ரமழான் மாதத்தில்தான்.
“நீங்கள் வந்த கப்பல்களை எரித்து விடுங்கள்!”
கி.பி 711ம் ஆண்டு கடல் வழியாக ஸ்பெயினுக்குள் நுழைந்தவுடன் தன்னுடைய சிறிய படையினரைப் பார்த்து தாரிக் பின் ஸியாத் இட்ட முதல் கட்டளை இதுதான். “நீங்கள் வந்த கப்பல்களை எரித்து விடுங்கள்!”
உடனே அந்தக் கட்டளை நிறைவேற்றப்பட்டது. எதிரே ஒரு பெரிய எதிரிப் படை இவர்களை எதிர் கொள்ளக் காத்துக் கொண்டிருந்தது. அதனைச் சிறிதும் பொருட்படுத்தாது தங்கள் தலைவரின் கட்டளையை அப்படியே செவியேற்று நிறைவேற்றினர் அந்தச் சிறியப் படையினர்.
அந்தப் படையினரைப் பார்த்து தாரிக் பின் ஸியாத் இவ்வாறு வீர உரையாற்றினார்: “என் அன்புச் சகோதரர்களே! அல்லாஹ்வின் பெயரை மேலோங்கச் செய்வதற்காக நாம் இங்கே நிற்கிறோம். உங்கள் எதிரிகள் இதோ எதிரில் நிற்கிறார்கள். உங்களுக்குப் பின்னுள்ளதோ கடல். அல்லாஹ்வின் மீது அளவில்லா நம்பிக்கை வையுங்கள். நீதியை நிலைநாட்ட உறுதியாக நின்று அல்லாஹ்வின் பாதையில் போராடுங்கள். உங்களுக்கு ஒன்று வெற்றி அல்லது வீரமரணம் கிடைக்கும். இது தவிர மூன்றாவது தெரிவு இல்லை. நீங்கள் தப்பிச் செல்வதற்கான அனைத்து வழிகளும் அடைபட்டுவிட்டன.”
மன்னர் ரோடரிக்கின் படையினரை முஸ்லிம்கள் மூர்க்கமாக எதிர்கொண்டனர். அல்லாஹ் அவர்களுக்கு மாபெரும் வெற்றியை வழங்கினான். கி.பி. 711ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி முஸ்லிம்களால் ஸ்பெயின் வெற்றிகொள்ளப்பட்டது.
ஆம்! ஸ்பெயின் வெற்றி கொள்ளப்பட்டதும் இதே ரமழான் மாதத்தில்தான். ரமழான் இறைபக்திக்கான மாதம் மட்டுமல்ல, வீரத்திற்கான மாதமும் கூட!...
Allahu Akbar
ReplyDelete