மதீனா முனவ்வராவைச் சுற்றி மஸ்ஜிதுல் குபா, மஸ்ஜிதுல் கிப்லதைன், மஸ்ஜித் பனூ அஷ்ஹல் இன்னும் மஸ்ஜிதுல் இஜாபா என்றழைக்கப்படும் மஸ்ஜித் முஆவியா போன்ற மஸ்ஜிதுகள் இருந்தும் அங்கே ஜுமுஆ நிகழ்த்தப்படவில்லை.
நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய காலத்தில் மஸ்ஜிதுந் நபவியிலே ஜுமுஆ நிகழ்த்தப்பட்டதன் பின் இரண்டாவதாக ஜுமுஆ நிகழ்த்தப்பட்ட மஸ்ஜித், மஸ்ஜித் ஜூவாஸா என்றழைக்கப்படும் மஸ்ஜித் அப்துல் கைஸ் ஆகும்.
அப்துள்ளாஹ் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ﷺ அவர்களுடைய மஸ்ஜிதிலே நிகழ்த்தப்பட்ட ஜுமுஆவிற்குப் பின்னால் மஸ்ஜித் அப்துல் கைஸில் தான் ஜுமுஆ நிகழ்த்தப்பட்டது.
[புஹாரி]
பனூ அப்துல் கைஸ் கோத்திரத்தினர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு இந்த மஸ்ஜிதை கட்டினார்கள். நபிகள் நாயகம் ﷺ அவர்கள் பனூ அப்துல் கைஸ் கோத்திரத்தினரை புகழ்ந்து பின்வருமாறு கூறியுள்ளார்கள். "நீங்கள் உங்கள் சகோதரர்களான பனூ அப்துல் கைஸ் கோத்திரத்தினரை கண்ணியப்படுத்துங்கள். ஏனெனில் அவர்கள் உங்களுக்கு மிகவும் ஒப்பானவர்கள். அவர்களோ எந்த நிர்ப்பந்தமுமின்றி மன விருப்பத்தோடு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்."
இந்த மஸ்ஜித் ஜுவாஸா மஸ்ஜிதுன் நபவியிலிருந்து சுமார் 1,115 கிலோமீட்டர் தொலைவில் அல்அஹ்ஸா பகுதியிலே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
COMMENTS