சூரியனைப் பற்றி அல்-குர்ஆன் கூறுவது என்ன?
சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக அனல் தெரிக்க பற்றி எரியும் இராட்சத சூரியனோடு நமது சின்னஞ்சிறிய பூமிப் பந்தை ஒப்பிடும்போது தென்படும் காட்சிதான் இது.
நம் மனித வாழ்விற்கு இன்றியமையாத, எமது வாழ்வாதார மூலதன சக்தியான சூரியன் வினாடிற்கு 600 மில்லியன் "டன்" ஹைட்ரஜனை எரித்துக் கொண்டு ஜொலிக்கிறது.
இச் சூரியனானது தற்பொழுது இளமை கொஞ்சும் வாலிபப் பருவத்தில் உள்ள துடிதுடிப்பான ஒரு நட்சத்திரமாகும். கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வயதைக் கொண்டதாக மதிப்பிடப்படும் இச்சூரியன், இதற்குள் அதன் ஹைட்ரஜன் களஞ்சியத்தில் சுமார் பாதியை எரித்து முடித்து விட்டது.
இதற்காக நானும், நீங்களும் கவலைப்படவோ, பதட்டப்படவோ தேவையில்லை. ஏனென்றால் அதனிடம் இன்னும் 5 பில்லியன் ஆண்டுகளுக்குத் தேவையான ஹைட்ரஜன் இருப்பில் உள்ளது.
அல்லாஹுத்தஆலா தனது அருள்மறையாம் திருக்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்:-
"மேலும் நாம் ஒரு அனல்வீசும் விளக்கை உருவாக்கினோம்."
[ அல்குர்ஆன்:- 78-13 ]
COMMENTS