ஜும்ஆ தினத்தில் ஓதக்கூடிய கவி நடைமுறையிலான மிக முக்கியமான துஆ
سيدنا إمام عبد الوهاب الشعراني - رحمة الله - أن من واظب على قراءة هذين البيتين في كل يوم جمعة، توفاه الله على الإسلام من غير شك ,
அந்த பைத்துகள்...
اِلٰهِيۡ لَسۡتُ لِلۡفِرۡدَوۡسِ اَهۡلاً
இறைவா நான் பிர்தௌஸ் எனும் சுவனத்திற்கு தகுதியானவன் அல்ல.
وَلاَ اَقۡوٰی عَلٰی نَارِاۡلجَحِيۡمِ
அதே சமயம் கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பை தாங்கிக்கொள்ள சக்தியும் இல்லை.
فَهَبۡ لِيۡ تَوۡبَۃً وَاغۡفِرۡذُنُوۡبِيۡ
ஆகையால் எனக்கு மன்னிப்பை அன்பளிப்பாக!, என் பாவங்களை மன்னிப்பாயாக!.
فَإِنَّكَ غَافِرُ الذَّنْبِ الْعَظِيْم
இறைவா நீயே பெரும்பரும் பாவங்களை மன்னிப்பவனாக இருக்கிறாய்.
மேலும் சில இமாம்கள் கூறுகிறார்கள்: ஒவ்வொரு ஜும்ஆவுடைய தொழுகைக்குப் பிறகும் இந்த இரண்டு பைத்துகளை ஐந்து முறை ஓதுவது சுன்னத் என்றும் குறிப்பிடுகிறார்கள். இதுவும் மேலே கூறப்பட்ட ஷஃரானி இமாமின் உடைய கூற்றும் (கஸஸுல் அய்யாம் வல் அஸ்ஹுர் ) என்ற கிதாபில் பக்கம் 146) என்பதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم :- فَعَلَيْكُمْ بِسُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيينَ
ஃபத்ஹுத் தைய்யான் ஃபீ ஃபிக்ஹி கைரில் அத்யான் எனும் கிதாபில் கூறியதாக அவர்களுடைய பேரர் டாக்டர் தைக்கா ஷுஐப் ஆலிம் காதிரியுல் ஜலாலி ஹஃபிலஹுல்லாஹ் அவர்கள் தன்னுடைய கிதாபான முன்ஜியாத்தில் இந்த பைத்தின் உடைய சிறப்புகளை சொல்கின்ற பொழுது இதை பதிவு செய்கிறார்கள்.
ஆகவே இந்த அமலை நாம் செய்கின்ற பொழுது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான வழிமுறையை பின்பற்றியவர்களாக நாம் ஆகிவிடுகிறோம்.
மேலும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்:
: قَالَ سَيَدِنا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ ) رواه مسلم .
எனவே இதை அதிகமாக பரப்புவதின் மூலமாக நம்மை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பொருத்தத்திற்கு சொந்தக்காரர்களாக நம்மை அல்லாஹ் ஆக்குவானாக
ஆமீன்.......
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்