فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ ۚ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ ۚ و...
فَفَهَّمْنَاهَا سُلَيْمَانَ ۚ وَكُلًّا آتَيْنَا حُكْمًا وَعِلْمًا ۚ وَسَخَّرْنَا مَعَ دَاوُودَ الْجِبَالَ يُسَبِّحْنَ وَالطَّيْرَ ۚ وَكُنَّا فَاعِلِينَ (79)
இந்த ஆயத்தினுடய விரிவுரையில் குர்ஆனின் விரிவுரையாளர்கள் கூறுகின்றார்கள். "இந்த ஆயத்தை அனுதினமும் சுபுஹ் தொழுகைக்குப் பிறகு 10 முறை வழமையாக ஓதி வந்தால் கல்வியில் நல்ல பரக்கத்துகள் கிடைக்கும்".
படிக்கின்ற மாணவர்கள் இதனை பின் பற்றிவாருங்கள். அல்லாஹ் கல்வியில் பரக்கத்தை உருவாக்கி வைப்பான்.
மேலும் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னாலும் 20 தடவைகள் ஃபாத்திஹாவை ஸூராவை ஓதி வந்தால் அவர்களுக்கு ஞாபகமறதி ஏற்படாது என்று உலமாக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
வயதிற்க்கு வராத குழந்தைகளுக்கு தாய்மார்கள் வுழுவுடன் 70 தடவை சூரத் ஃபாத்திஹாவை 7 நாள் தொடர்ந்து ஓதி தண்ணீரில் ஊதி குடிக்க வைய்து வந்தால் அக்குழந்தைகளுக்கு கல்வியில் பரக்கத் ஏற்படும் என்று இமாம்கள் சொல்லித்தந்திருக்கிறார்கள்.
எல்லாம் வள்ள ரஹ்மான் நம் அனைவருக்கும் பயன்தரக்கூடிய கல்வியையும், அதன் படி அமல் செய்யக்கூடிய பாக்கியத்தையும் தந்தருள்வானாக..
ஆமீன்.
உங்களின் துஆக்களில் எங்களையும், எங்கள் குடும்பத்தார்களையும், எங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்
COMMENTS