ஸாலிஹீன்கள், நல்லவர்களின் நட்பு என்பது மறுமையில் கிடைக்கக்கூடிய புதையல் ஆகும்.
நாளை மறுமை நாளில் கேள்வி கணக்குகள் எல்லாம் முடிந்து சுவர்க்கவாசிகள் சுவர்க்கத்திற்கும் நரகவாசிகள் நரகத்திற்கும் சென்ற பிறகு சுவர்க்கத்திலுள்ள ஒரு நபர் அல்லாஹ்விடம் கேட்பாராம். யா அல்லாஹ்..! எனக்கு ஒரு நண்பரிருந்தார் அவரை நான் சுவனத்தில் தேடிப் பார்த்தேன். அவரைக் காணவில்லை என்றதும் அல்லாஹ் சொல்வானாம்.
உன்னுடைய நண்பர் நரகத்திலிருக்கிறான். அவன் தப்பு செய்ததினால் நரகத்திலிருக்கிறான் என்று அல்லாஹ் சொன்னதும். அல்லாஹ்விடம் அந்த சுவர்க்கவாசி, யா அல்லாஹ் என்னுடைய நண்பர் இல்லாமல் என்னுடைய ஆசைகள் நிறைவேறாது அவர் என்னுடன் இருந்தால் தான் எனக்குச் சந்தோஷம். என்றதும் கருணையாளர்களுக்கு எல்லாம் கருணையாளன் அல்லாஹ் அந்த நரகவாசியான அந்த நபரை சுவர்க்கத்திற்கு அனுப்பிவிடுவான்.
நரகத்திலிருப்பவர்கள் எல்லாம் கேட்பார்களாம் எப்படி அந்த நபருக்கு சுவனம் கிடைத்தது. அவர் நற்செயல் ஏதும் செய்யவில்லையே!. அவருக்கு சிபாரிசு செய்தவர் யாராயிருக்குமென்று அவர்களுக்குள் பேசி கொள்வார்களாம். அப்பொழுது அவர்களில் ஒருவர் அவருடைய தந்தை அல்லது சகோதரரில் யாரேனும் ஒருவர் ஷஹீது ஆகி அவர்களுடைய சிபாரிசில் சென்று இருக்கலாம் என்றதும்.
அங்கு உள்ள ஸாலிஹான மலக்குகள் அவர் அவர்களுடைய சிபாரிசில் செல்லவில்லை. அவருடைய ஸாலிஹான நண்பர்தான் அவருக்காக சிபாரிசு செய்ததார் என்று அந்த மலக்குமார்கள் கூறுவார்கள் கூறுவார்கள்.
பின்பு அந்த நரகத்திலுள்ள நரகவாசிகள் இப்படிச் சொல்வார்கள் என்று அல்லாஹ் தன்னுடைய அருள்மறையாம் திருக்குரானில் சொல்லிக்காட்டுகிறான்.
فَمَا لَنَا مِن شَافِعِينَ . وَلَا صَدِيقٍ حَمِيمٍ
ஆகவே, எங்களுக்காகப் பரிந்து பேசுவோர் (இன்று) எவருமில்லை. அனுதாபமுள்ள உற்ற நண்பனும் இல்லை.(26 :100,101)
எங்களுக்கு சிபாரிசு செய்ய யாருமில்லை, சிபாரிசு செய்ய நண்பருமில்லை என்று நரகத்தில் சப்தமிட்டு அழுவார்கள்.
ஸாலிஹீன்கள், நல்லவர்களின் நட்பு என்பது மறுமையில் கிடைக்கக்கூடிய புதையல் ஆகும். அந்த வழி மூலமாக நமக்கு ஈருலத்திலையும் வெற்றி அடையக் கூடியவர்களாக வள்ள ரஹ்மான் அருள் புரிவானாக...
ஆமீன்.