ஒவ்வொரு காலை, மாலை நேரமும் நாம் பல்துலக்குகிறோம். அதே போன்று மிஸ்வாக்கை கொண்டு வுழு செய்யும் முன்பு மிஸ்வாக் செய்கிறோம். அத...
ஒவ்வொரு காலை, மாலை நேரமும் நாம் பல்துலக்குகிறோம். அதே போன்று மிஸ்வாக்கை கொண்டு வுழு செய்யும் முன்பு மிஸ்வாக் செய்கிறோம்.
அதே போன்று வுழு செய்யும் முன்பும், பின்பும் மற்றும் தொழுகைக்கு முன்பு 3 விடுத்தம் வலதிலிருந்து இடது மிஸ்வாக் செய்தால் 70 மடங்கு நன்மைகள் கிடைக்கும்.
மிஸ்வாக் குச்சி இல்லாத பட்சத்தில் வுழு செய்யும் முன்பு வேறு ஏதேனும் பொருளைக் கொண்டு பல் துலக்கினால் அதற்கான நன்மை கிடைக்கும். ஆனால் மிஸ்வாக்கை பயன்படுத்துவது ஏற்றமாகும்.
இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி நாயகம் அவர்களின் கூற்றுப்படி மிஸ்வாக்குக்குப் பதிலாக வேறு ஏதேனும் ஒன்றைக் கொண்டு பல் துலக்கினாலும் அதே தரம் வாய்ந்த நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள்.
நாம் பல்துலக்குவானோ (பிரஷ்) அல்லது மிஸ்வாக்கையோ கீழ் இருக்கும் படத்தில் உள்ளவாரு பிடித்து பயன்படுத்தி மிஸ்வாக் செய்து வந்தால் ஒரு சுன்னத்தை உயிர்பிக்க செய்த நன்மை கிடைக்கும்.
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم :- من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة
"கண்மணி நாயகம் அவர்கள் சொல்கிறார்கள் யார் என்னுடைய சுன்னதை உயிர்பிக்கிறாரோ அவர் என்னை விரும்பியவர் ஆவார். மேலும் யார் என்னை விரும்புகிறாறோ அவர் சுவனத்தில் என்னுடன் இருப்பார்கள்".
மிஸ்வாக்கு செய்வதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்
1 ) வாய் சுத்தம் ஆகும்.
2)அல்லாஹ்வின் பொருத்தமும், ஸைய்யிதினா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாயகம் அவர்களின் பொருத்தமும் கிடைப்பதற்கு காரணமாகும்.
3 ) பற்கள் வெண்மையாக்கும்.
4 ) வாய் துர்நாற்றம் இருக்காது.
5 ) பற்களின் ஈறுகள் உறுதியாகும்.
6 ) மரண தருவாயில் நாவில் கலிமா வரும்.
7 ) மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.
8)மிஸ்வாக்கு செய்து சின்ன அமல் செய்தலும் மும்மடங்கு நன்மை கிடைக்கும்.
9 ) தலை சம்மந்தமான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெரும்.
10 ) கண்பார்வை தெளிவு பெரும்.
11 ) நாளை மறுமை நாளில் நமது வலதுகையில் நமது பட்டேலை கிடைக்கும்.
12 ) பற்கள் பலம் பெரும்.
13 ) வெண்குஷ்ட நோயிலிருந்து பாதுகாப்பு பெரும்.
14 ) ரிஸ்கு பரக்கத் பெரும்.
15 ) கபுறுகளில் பதில்களை இலகுவாக சொல்ல முடியும்.
16 ) வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும்.
ஸைய்யிதினா இமாம் ஷாஃபி ரழியல்லாஹு அன்ஹு நாயகம் அவர்களின் மத்ஹபு கூற்றின்படி மிஸ்வாக்கு இல்லாமல் பிறஷ் வைத்து பல் துவக்கினாலும் நன்மை கிடைக்கும் ஆனால் மிஸ்வாக்கு வைத்து பல் துளக்குவது சிறப்பாகும்.
நாம் சாதாரணமாக நினைக்கக்கூடிய இந்த அமலிற்கு அல்லாஹ் இவ்வளவு உயர்த்த அந்தஸ்தை அருளியுள்ளான். ஆகவே இதை படிப்பதும், அனுப்புவதும் மட்டுமில்லாமல் நாம் வாழ்க்கையில் இதை பின்பற்றி அமல் செய்யக்கூடிய பாக்கியத்தை வள்ளரஹ்மான் அருள்வானாக ஆமீன்..