இமாம் கஸ்தல்லானிலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கிதாபான அண் மவாஹிபுல்ழதுண்ணிய்யா எனும் கிதாபில் (145) பக்கம் இப்படி குறிப்பிடுவார்க...
இமாம் கஸ்தல்லானிலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கிதாபான அண் மவாஹிபுல்ழதுண்ணிய்யா எனும் கிதாபில் (145) பக்கம்
இப்படி குறிப்பிடுவார்கள் அதாவது
بأن ليلة مولده نبي صلى الله عليه وسلم افضل من ليلة القدر من وجوه ثلاثة
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் லைலத்துல் கத்ரை இரவை விட சிறந்ததாகும். என்று குறிப்பிடும் இமாம் அவர்கள் அதற்கு மூன்று காரணங்களையும் சொல்கிறார்கள்.
1 நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்பட்ட தினமாகும். ஆனால் லைலத்துல் கதர் இரவு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தினமாகும். இதை வைத்துப் பார்க்கின்ற பொழுது ஸெய்யிதுனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வெளிப்பட்டதனால் தான் இந்த இரவு அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த இரவு லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்ததாக இருக்கின்றது என்பதற்கு முதலாவது காரணத்தை
இமாம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
2 லைலத்துல் கதர் இரவு அன்று வானவர்கள் பூமியிலே அதிகாலை நேரம் வரை இறங்கிக் கொண்டே இருக்கின்றார்கள். இதுதான் இந்த இரவின் முக்கிய சிறப்பாக இருக்கின்றது. ஆனால் ஸெய்யிதுனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் இப்பூவுலகில் புண்ணியம் பூக்கும் புனித நபிகளார் வெளிப்பட்ட தினமாகும். ஆகையால் இப்புனித இரவு சிறந்த இரவாக இருக்கின்றது..
3 லைலத்துல் கதர் இரவு செய்துனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினுடைய சமூகத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட பாக்கியம் நிறைந்த இரவாகும். ஆனால் செயுதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் இவ்வுலகில் வெளிப்பட்ட தினம் இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் கொடுக்கப்பட்டுள்ள பாக்கியம் நிறைந்த தினமாகும். இதை வைத்துப் பார்க்கின்ற பொழுது லைலத்துல் கத்ர் இரவை விட செயுதுனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த தினம் சிறந்த தினமாக இருக்கின்றது.
எனவே அன்பார்ந்தவர்களே லைலத்துல் கத்ர் இரவை நாம் எந்த அளவுக்கு சிறப்பாக கொண்டாடுவோமோ அதைவிட பன்மடங்கு அதிகமாக இப்புனித நபியின் பிறந்தநாளை
கொண்டாடுவதற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக.
ஆமீன்...
COMMENTS