ஸய்யிதினா இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய கிதாபான நிஃமதுல் குப்ரா எனும் கிதாபில் கூறுகிறார்கள். குலபாஉர் ...
ஸய்யிதினா இமாம் இப்னு ஹஜர் அல் ஹைதமி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய கிதாபான நிஃமதுல் குப்ரா எனும் கிதாபில் கூறுகிறார்கள். குலபாஉர் ராஷிதீன்கள் அனைவர்களும் நாயகத்தின் மௌலிது ஓதுவதை பற்றியும் அதனுடைய சிறப்புகளைப் பற்றியும் கூறுகின்ற பொழுது...
1. ஸெய்யிதுனா அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
من عظم مولد النبي صلى الله عليه وسلم وكان سببا لقراءته لا يخرج من الدنيا إلا بالإيمان ويدخل الجنة بغير حساب
யார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பை கண்ணியம் செய்வாரோ மேலும் அவர்கள் உடைய மவ்லூத் ஓதுவதற்கு யார் காரணமாக இருப்பாரோ அவர் இவ்வுலகிலிருந்து ஈமானோடு வெளியேறுவார். இன்னும் கேள்வி கணக்கு இல்லாமல் சுவனம் நுலைவார்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
2. ஸெய்யிதுனா உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين
யார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மவ்லூத் ஓதுவதற்கு ஒரு திர்ஹம் செலவு செய்கிறாரோ! அவர் பத்ரு, ஹுனைன் போர்களில் உயிர் தியாகம் செய்தவர் போல் ஆகிவிடுவார் என்று கூறினார்கள்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
3. ஸெய்யிதுனா உமர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்:
من عظم مولد النبي صلى الله عليه وسلم فقد أحيا الإسلام
யார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை கண்ணியம் செய்வாரோ அவர் இஸ்லாத்தை உயிர் பித்தவர் ஆவார் என்று கூறினார்கள்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
4.. ஸெய்யிதுனா இமாம் ஹஸனுல் பஸரி நாயகம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகிறார்கள்:
وددت لو كان لي مثل أحد ذهبا فأنفقته على قرائة مولد النبي صلى الله عليه وسلم
எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்திதிருந்தால் அவை அனைத்தையுமே கண்மணி நாயகம் அவர்களின் மவ்லிது ஓதுவதற்காக செலவு செய்திருப்பேன் என்று நான் ஆசைப்படுகிறேன்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
5 இமாம் ஸெய்யிதுனா ஷுயூத்தி ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறினார்கள்.
ما منْ مُسْلِمٍ قَرَأَ فيِ بَيْتِهِ مَوْلِدَ النَّبِيِّ صَلَّى االلهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلاَّ رَفَعَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالىَ اَلْقَحْطَ وَالْوَبَاءَ وَالْحَرْقَ وَالْغَرْقَ وَاْلآفَاتِ وَالْبَلِيَّاتِ وَالْبُغْضَ
وَالْحَسَدَ وَعَيْنَ السُّوءِ وَاللُّصُوصَ عَنْ أَهْلِ ذَلِكَ الْبَيْتِ فَإِذَا مَاتَ هَوَّنَ االلهُ عَلَيْهِ
جَوَابَ مُنْكَرٍ وَنَكِيرٍ
எந்த வீட்டிலே கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் பிறப்பைப் பற்றி பேசப்படுகின்றதோ! அந்த வீட்டிலே வசிப்பவர்களுக்கு அல்லாஹுத்தஆலா பஞ்சம், கொடிய நோய்கள், தீப்பிடித்தல், மூழ்குதல், ஆபத்துகள், நோவினைகள், கோபம், பொறாமை, கண்ணூறு, திருட்டு போன்ற அனைத்தையும் விட்டும் பாதுகாக்கின்றான்.
மேலும் அவர்கள் மரணித்து விட்டால் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு முன்கர், நகீரின் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கேள்விகளை இலகுவாக்குகின்றான்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
6 ஷேய்குனா மஃரூஃபுல் கர்கி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:
مَنْ هَيَّأَ طَعَامًا لِأَجْلِ قِرَاءَةَ مَوْلِدِ النَّبِيِّ ﷺ وَجَمَعَ إِخْوَانًا وَاَوْقَدَ سِرَاجًا وَلَبِسَ جَدِيدًا وَتَبَخَّرَ وَتَعَطَّرَ تَعْظِيمًا لِمَوْلِدِ النَّبِيِّ ﷺ حَشَرَهُ اللّٰه يَوْمَ الْقِيَامَةِ مَعَ الْفِرْقَةِ الْأُولَى مِنَ النَّبِيِّينَ وَكَانَ فِى اَعْلَى عِلِّيِّينَ
யார் ஸெய்யிதுனா நாயகம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிது ஓதுவதற்காக உணவு தயாரிக்கிறாரோ இன்னும் ஸெய்யிதுனா ரஸீலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பை கண்ணியப் படுத்துவதற்காக சகோதரர்களை ஒன்றுசேர்த்து, விளக்கு ஏற்றி, புத்தாடை அணிந்து, அத்தர் பூசிக்கொள்ளகிறாரோ அவரை அல்லாஹுத்ஆலா மறுமை நாளில் நபிமார்களின் முதல் கூட்டத்துடன் எழுப்புவான். இன்னும் அவர் இல்லிய்யீன் என்ற உயர்ந்த சுவனத்திலே இருப்பார்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
7. ஸெய்யதுனா ஜுனைதுல் பஃதாதி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் :
مَنْ حَضَرَ مَوْلِدَ النَّبِيِّ ﷺ قَدْرَهُ فَقَدْ فَازَ بِالْإِيمَانِ
யார் கண்மணி நாயகம் ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வ ஸல்லம் அவர்களின் மவ்லிதிற்குக் கண்ணியப்படுத்தியவராக ஆஜர் ஆகுவாரோ நிச்சயமாக அவர் ஈமானைக் கொண்டு வெற்றி பெற்றுவிட்டார்.
நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
8..செய்யிதுனா இமாம் கிஸ்தலானி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:
بأن ليلة مولده نبي صلى الله عليه وسلم افضل من ليلة القدر
லைலத்துல் கத்ர் இரவை விட சிறந்தது செய்யிதுனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் நாயகம் பிறந்த அந்த இரவாகும்.
.நூல் : அன்னிஃமத்துல் குப்ரா :7
எனவே அன்பார்ந்தவர்களே புனிதமிக்க ரபீஉல் அவ்வல் மாதத்தில் அனைத்து பள்ளிகளிலும் மெளலிது ஷரீஃப்கள் ஓதுவது வழக்கமாக இருந்து கொண்டிருக்கின்றது. அதிலே முடிந்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறும், அதில் முடியாதவர்கள் தன்னுடைய வீட்டிலேயே குடும்பத்தவர்களுடன் இணைந்து செய்துனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய புகழ் மாலைகளை ஓதியும், அதுக்கு முடியாதவர்கள் செய்யிதினா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய புனித மிக்க மெளலிதுகளும், புகழ்மாலைகளும் ஓதப்படக்கூடிய இடத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைத்துத் தேவைகளையும் ஸெய்யிதுனா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய பிறந்த மாதமான புனித மாதத்தின் பொருட்டால் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்...
COMMENTS