1.உத்தம சஹாபாக்களிடம் (ரலியல்லாஹு அன்ஹும்) இஸ்லாமிய அகீதாவின் தெளிவும் உறுதியும் இருந்தது. 2.கிழக்கிற்கும் மேற்கிற்கும் ரப்பாக ...
2.கிழக்கிற்கும் மேற்கிற்கும் ரப்பாக அல்லாஹ் இருக்கிறான். கிழக்கும் மேற்கும் ரப்புடைய வாழ்வொழுங்கிற்குள்தான் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்து இஸ்லாத்தை கிழக்கிலும் மேற்கிலும் ஆளுகை நிலைக்கு கொண்டுவர உழைத்தார்கள்.
3.மனிதனுடைய வாழ்வியல் விவகாரங்கள் அனைத்தும் அந்த ரப்புடைய கட்டளையின்படி ஒழுங்குபடுத்தப்பட உழைத்தார்கள்.
4.நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்கள் மதீனாவில் இஸ்லாமிய அரசை நிறுவவும், அதன் மூலம் தஃவா ஜிஹாத் செய்து தீனுல் இஸ்லாத்தை உலகெங்கும் வியாபிக்கச் செய்யவும் அயராது உழைத்தார்கள்.
5.இவர்களிடம் ஆன்மீகம் வேறு அரசியல் வேறு என்ற சிந்தனை இருக்கவில்லை.
6.நன்மையை ஏவி தீமையை தடுக்கும் அரசியலை செய்வதன் மூலம் தீனுல் இஸ்லாம் நிலைநிறுத்தப்படவும் பாதுகாக்கப்படவும் உழைத்தார்கள்.
7.சஹாபாக்கள் சுன்னாக்களை (மன்துப்-முஸ்தஹப் ஆக இருந்தாலும் அதை உயர்வாக பார்த்து) பர்ளுடைய அந்தஸ்த்தில் வைத்து அமல்செய்தார்கள்.
8.சஹாபாக்கள் மக்ருஹான விடயங்களை (அல்லாஹ்வும், அவனது ரசூலும் வெறுத்த காரியமாக இருந்தாலும் அதற்கு பயந்து) ஹறாம் எனும் அந்தஸ்தில் வைத்து அமுல்படுத்தினார்கள்.
9.சஹாபாக்களிடம் (ஆதாயம் இன்பம் போன்றவை நோக்கமாக இல்லாமல்) ஹறாம் ஹலால்தான் அவர்களின் வாழ்வின் அடிப்படையாக என்றும் மிளிர்ந்தது.
10.சஹாபாக்களோ சுவர்கத்தை கண்முனே நிறுத்தி அதன் இன்பங்களை ஆசித்து அதனை அடைய முயற்சித்தார்கள். அத்துடன் நரகத்தை கடுமையாக அஞ்சிய படி தமது அனைத்து காரியங்களையும் ஒழுங்குபடுத்தினார்கள். தமது ஒவ்வொருசெயலுக்கும் மறுமையில் பதில் சொல்லவேண்டிவரும் என்பதனை எல்லாச் சந்தர்ப்பத்திலும் உணர்ந்து வாழ்வை ஒழுங்குபடுத்தினார்கள்.
ஆனால்.....
இன்றைய முஸ்லிம்களது “அகீதா” (கொள்கை) நோக்கினால் அகீதாவில் கட்டியெழுப்பப்பட்ட சிந்தனைகளான “மதஒதுக்கல் சிந்தனை (மதசார் பின்மை) அதாவது அல்லாஹ்வை வாழ்வியல் விவகாரத்தில் வழிப்படுவதை விட்டும் விலகி தாராண்மைவாதச் சிந்தனை, ஜனநாயகம், முதலாளித்துவம், சோசலிஷம்” போன்ற தாஃகூத்திய/குஃப்ரிய சிந்தனைத் தாக்கத்திற்கு உட்பட்டு தமது வாழ்வின் இலக்கும் இஸ்லாம்பற்றி தெளிவும் இல்லாத நிலையில் வாழ்வதால் உயிரோட்டமில்லாத முஸ்லிம் உம்மத்தாக இன்றைய முஸ்லிம் உம்மா மாறியள்ளது.
எனவே முஸ்லிம் உம்மாவினது “சிந்தனையும் உணர்வும்” இஸ்லாத்தின் அடிப்படையில் கலாச்சாரப்படுத்தப்பட்டு சஹாபாக்களிடம் காணப்பட்ட “இஸ்லாமிய சிந்தனை மற்றும் உணர்வுகள்” உருவாக்கப்பட முஸ்லிம் உம்மத்தில் கலாச்சாரப்படுத்தும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். இத்தகைய பாரிய பொறுப்பை முஸ்லிம் உம்மத்தில் உள்ள நபிமார்களின் வாரிசுகளாகிய உலமாக்கள் முன்னெடுக்க வேண்டும். இதனால்தான் இந்த உம்மத் 'ஹைறே உம்மத்' என்றழைக்கப்படுகிறது.
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள். தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;.” (3:110)
COMMENTS