ஸையிதினா இமாம் ராம்லீ ரழியல்லாஹு அன்ஹு இவர்கள் அதிகமான மார்க்க சட்ட கிதாபுகளையும், சுன்னத் வல் ஜமாத் கிதாபுகளையும் எழுதியுள்ளார்கள். ...
ஸையிதினா இமாம் ராம்லீ ரழியல்லாஹு அன்ஹு இவர்கள் அதிகமான மார்க்க சட்ட கிதாபுகளையும், சுன்னத் வல் ஜமாத் கிதாபுகளையும் எழுதியுள்ளார்கள்.
அவர்களுடைய கிதாபில் ஒரு கேள்வி ஒன்று எழுப்புவார்கள். மக்கள் கஷ்டப்படும் போது அவர்கள் "யா ரசூலுல்லாஹ்..! யா ஷைகு மார்களே...! யா அவ்லியாக்களே...! எங்களை காப்பாற்றுங்கள்" என்று சொன்னால், அவர்களால் உதவி செய்ய முடியுமா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
அவ்வாறு கூப்பிடுவது இஸ்லாத்தில் கூடுமா? அவ்வாறு அழைத்தால் அவர்களால் உதவி செய்ய முடியுமா? என்ற இந்த கேள்விக்கு ஸையிதினா இமாம் ராம்லீ ரழியல்லாஹு அன்ஹு பதில் கூறுகிறார்கள்.
நபிமார்களின் முஃஜிசாத்தும், வழிமார்களின் கராமத்தும் அவர்களின் மரணத்திற்கு பிறகும் தொடரும் அது முறியாது. ஆகையால் நபிமார்களிடமும், வழிமார்களிடமும் உதவி கேட்கலாம் இஸ்லாத்தில் அனுமதி இருக்கின்றது. தாராளமாக உதவி கோரலாம். (கிதாபு ஃபதவா ராம்லீ 3 - 82 )
1 - நபிமார்களுக்கு முஃஜிஸாது இருக்கிறது.
2 - வழிமார்களுக்கு கராமத்து இருக்கிறது.
3 - மரணத்திற்கு பிறகு முஃசிசாது முறியாது.
4 - மரணத்திற்கு பிறகு கிராமத்து முறியாது.
5 - மரணத்திற்கு பிறகு நபிமார்கள் உதவி செய்வார்கள்.
6 - மரணத்திற்கு பிறகு அவ்லியாக்களும் உதவி செய்வார்கள்.
7 - மரணத்திற்கு பிறகு நபிமார்களிடம் இஸ்திகாது கேட்பது இஸ்லாத்தில் கூடும்.
8 - மரணத்திற்கு பிறகு அவ்லியாக்களிடம் இஸ்திகாது கேட்பது இஸ்லாத்தில் கூடும்.
இஸ்திகாது கேட்பதில் ஸையிதினா இமாம் ராம்லீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஃபத்வா ஆகும்.
COMMENTS