கவலைகளிலே மிக கவலையான விஷயம் கண்மணி நாயகத்தின் பெயரை சாதாரணமாக கண்ணியமின்றி அழைப்பது. لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا ...
கவலைகளிலே மிக கவலையான விஷயம் கண்மணி நாயகத்தின் பெயரை சாதாரணமாக கண்ணியமின்றி அழைப்பது.
لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا (سورة النور ٦٣)
لا تنادوه كما ينادي بعضكم بعضا يا محمد يا أبا القاسم، ولكن قولوا يا سيدي يا رسول الله , يا سيدي يا نبي الله
சூரத் நூர் 63 ஆம் ஆயத்தில் அல்லாஹ் கூறுகிறான் மற்றவர்களை அழைப்பது போன்று ரஸுலுல்லாஹ்வை பெயர் சொல்லி அழைக்கக் வேண்டாம் என்று குர்ஆனில் கூறுகிறான். சஹாபாக்கள், தாபியீன்கள், அவ்லியாக்கள் யாருமே ஸையிதுனா ரஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் சொல்லி அழைத்தது கிடையாது. ஸையிதுனா ரஸுலுல்லாஹ், ஸையிதுனா ஹபீபுல்லாஹ் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள்.
ஸையிதுனா சுயூத்தி நாயகம் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் "கண்மணி நாயகத்தின் பெயரை சொல்ல விரும்பினால் அவர்களின் பெயருக்கு முன்னால் ஸையிதுனா சேர்த்து சொல்லவேண்டும்" ஏனென்றால் கண்மணி நாயகம் ﷺ அவர்களின் நபி மொழியில் சொல்லியிருக்கிறார்கள்.
( أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ وَلاَ فَخْرَ )
"நான் ஆதம் உடைய மக்களின் தலைவராவேன்" என்று சொல்லியிருக்கிறார்கள். கண்மணி நாயகத்தின் பெயர் சொல்ல விரும்பினால் அவர்களின் பெயருக்கு முன்பு ஸையிதுனா சேர்த்து சொல்லவேண்டும் அதுதான் மறியாதையும் ஆகும். யா அல்லாஹ் கண்மணி நாயகத்தின் முன்பு கண்ணியமான முறையில் நின்று அவர்களின் ஆஷிகீன்களின் கூட்டத்தில் எங்களை சேர்த்தருள்வாயாக யா ரஹ்மானே..!
COMMENTS