உலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதனும் பிறப்பதற்கு முன்பு அவர்களின் தாய் வயிற்றில் 4 மாதத்தில் அல்லாஹ் அந்த குழந்தையை வெற்றி ஆனவரா அல்லது தோ...
உலகத்தில் இருக்கின்ற எல்லா மனிதனும் பிறப்பதற்கு முன்பு அவர்களின் தாய் வயிற்றில் 4 மாதத்தில் அல்லாஹ் அந்த குழந்தையை வெற்றி ஆனவரா அல்லது தோழ்வி ஆனவரா என்று எழுதிவைக்கிறான்.
அல்லாஹ் வுடைய இந்த விதியை எந்த ஒரு அமலாலும் மாற்ற இயலாது. ஆனால் ஸலவாத் சொல்வதினால் மாற்றலாம் என்று கண்மணி நாயகம் அவர்கள் நமக்கு சொல்லித்தந்து இருக்கிறார்கள்.
ஸையிதுனா நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மாணவரும், ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழரும், ஸையிதுனா கௌதுல் அஃலம் அவர்களின் முரீதுமான ஸையிதுனா ஷம்ஹுரஸ் ரழியல்லாஹு அன்ஹு என்ற ஒரு ஜின் (குத்பியா ஓதுகின்ற பொழுது இந்த ஜின்னுடைய பெயரில் பாத்திஹா ஓதுவார்கள்) அந்த ஜின் தான் இவர்கள்.
ஸையிதுனா ஷம்ஹுரஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸலவாத்து சம்பந்தமாக பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த ஜின் ஸஹாபி இடம் கண்மணி நாயகம் அவர்கள் ஒரு கேள்வி ஒன்றை கேற்றார்கள்.
ஷம்ஹுரஸ் அர்களே ஒரு குழந்தை தான் 4 மாதம் தன் தாயின் வயிற்றில் இருக்கும்பொழுது அந்த குழந்தை வெற்றி ஆனவரா அல்லது தோழ்வி ஆனவரா என்று அல்லாஹ் நெற்றியில் எழுதிவிடுகிறான்.
அவ்வாறு ஒரு குழந்தையின் நெற்றியில் தோற்றவன் என்று எழுதப்பட்ட பிறகு அந்த குழந்தையின் நெற்றியில் எழுதப்பட்ட அந்த விதியை வெற்றி ஆனவர் என்று மாற்ற இயலுமா என்று அந்த ஜின்னிடம் கேள்வியை கேற்றார்கள்.
ஸையிதுனா ஷம்ஹுரஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ் வரசூல் அஃலம் என்று பதில் சொன்னார்கள். அந்த நேரத்தில் உடனே ஸையிதுனா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் "ஒரு தாயின் வயிற்றில் இருக்கின்ற அந்த குழந்தையின் நெற்றியில் தோற்றவன் என்று எழுதப்பட்டு பிறகு அவர் பிறந்து என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லி வாழ்க்கையை கழித்தால் அவரை அல்லாஹ் வெற்றி பெற்றவராக மாற்றிவிடுவான்".
இந்த சம்பவத்தை ஸையிதுனா ஸையிது முஹம்மது இப்னு காசிம் அல் கந்தூசி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரது கிதாபான (ஷரபு அஹ்லுஸ் ஸஃபா ஃபீ ஸலாத்தி அலா நபியில் முஸ்தபா) பக்கம் 22 , 23 ல் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஸலவாத்தை ஒரு முறை ஓதினால் ஒரு லட்சம் முறை ஓதிய நன்மை கிடைக்கும் என்று இமாமுல் அரூஸ் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் தன்னுடைய கிதாபான ஃபத்ஹுத் தைய்யான் ஃபீ ஃபிக்ஹி கைரில் அத்யான் எனும் கிதாபில் கூறினார்கள்.
ﺍﻟﻠَّﻬُﻢَّصٙلِّ وٙسٙلِّمْ وٙبٙارِكْ عٙلىٰ سٙيِّدِنٙا مُحٙمّٙدٍ وّٰٙاٙلِهٖ وٙصٙحْبِهٖ عٙدٙدٙ مٙا فِيْ عِلْمِ اللهِ صٙلاٙةً دٙائِمَةً بِدٙوٙامِ مُلْكِ الله
உங்களின் எல்லா துஆக்களிலேயும் எங்களையும், எங்கள் குடும்பத்தார்களையும், எங்கள் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அல்லாஹ் கண்மணி நாயகத்தின் அன்பை பெறக்கூடியவர்களாக நம்மை ஆக்கி அருள்வானாக.. ஆமீன்
ஆக்கம்:-
தைக்கா முஹம்மத் ஸதகாஹ்