அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முஹம்மத் ﷺ அவர்களை ஈன்றெடுத்த பொழுது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் இரு முட்டுக் கா...
அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் முஹம்மத் ﷺ அவர்களை ஈன்றெடுத்த பொழுது முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் இரு முட்டுக் கால்கள் மீது ஊண்டியவர்களாக தலையை வானத்தின் பால் உயர்த்தியவர்களாகவும் பிறந்தார்கள். காரணம் வானம் என்பது ரஹ்மத்துகள் இறங்கும் இடமாகும். மேலும் மலக்குமார்கள் தங்குமிடம் ஆகும். மாறாக அல்லாஹ் இருக்கும் இடம் அல்ல. ஏனெனில் அல்லாஹ் இடம், திசைகள் இன்றி உள்ளவன்.
முஹம்மத் ﷺ அவர்கள் பிறக்கும் பொழுது ஒரு வெளிச்சம் தோன்றியது. அதன் பிரகாசம் அன்னை ஆமினா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பஸ்ராவிலுள்ள ஒட்டகங்களின் கழுத்துக்களை காணும் அளவுக்கு ஒளிர்ந்தது. முஹம்மத் ﷺ அவர்கள் பிறந்த இரவு கண்ணியம், மகத்துவம் மற்றும் பரக்கத் பொருந்திய உண்ணத இரவாகும்.
அவர்கள் பிறந்த இரவில் கிஸ்ரா மன்னனின் கோட்டை அதிர்ந்தது. மேலும் அதிலிருந்து பதினான்கு வெல்கோள்கள் விழுந்தது. மேலும் பாரசீகத்தில் ஆயிரம் வருடங்களாக எரிந்து கொண்டிருந்த நெருப்பும் அணைந்தது. சாவா என்னும் குளமும் வற்றியது.
மேலும் இவ்விரவில் இப்லீஸ் வான செய்திகளை ஒட்டுக் கேட்பதை விட்டும் தடுக்கப்பட்டான். மேலும் இப்லீஸ் லஃனத் செய்யப்பட்ட பொழுதும், சுவனத்தை விட்டும் வெளியேற்றப்பட்ட பொழுதும், சூரத்துல் பாத்திஹா இறங்கிய பொழுதும் ஓலமிட்டதைப் போன்று முஹம்மத் ﷺ அவர்கள் பிறக்கும் பொழுதும் ஓலம் இட்டான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இமாம் அல் புஹாரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்:-
"முஹம்மத் ﷺ அவர்கள் ஈச்சம் குற்றியினால் அமைக்கப்பட்ட மிம்பர் மீது குத்பா பிரசங்கம் செய்யும் வழமையுடையவராக இருந்தார்கள். அன்சாரித் தோழர்களில் ஒருவர் அல்லது ஒரு பெண்மணி " அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நாங்கள் ஒரு மிம்பரை செய்து தரட்டுமா?" என்று கேட்டார்கள். அதற்கு " நீங்கள் விரும்பினால் செய்து தாருங்கள்" என முஹம்மத் ﷺ அவர்கள் கூறினார்கள். அவர் ஒரு மிம்பரை செய்து கொடுத்தார். ஜும்ஆஃ நாளன்று புதிதாக செய்து கொடுக்கப்பட்ட மிம்பரின் மீது பெருமானார் முஹம்மத் ﷺ அவர்கள் ஏறினார்கள். அந்த ஈச்சம் குற்றி சிறுபிள்ளை அணுங்குவது போன்று அணுங்கியது. இதனை அங்கிருந்த அனைவரும் செவியுற்றனர். பின்னர் முஹம்மத் ﷺ அவர்கள் புதிய மிம்பரில் இருந்து இறங்கி அந்த ஈத்தம் குற்றியை தன்னோடு அணைத்துக் கொண்டார்கள். அதன் பிறகுதான் அது அமைதியடைந்தது.
COMMENTS